ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ படம் பிப்ரவரி 13, 2026 அன்று வெளியாகியுள்ளது. ராஜூ முருகன் சமூக அரசியலை (My Lord Review) உள்வாங்கிய கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்தன்மை பெற்றவர். ஒரு உண்மை சம்பவ அடிப்படையில் ராஜூ முருகன் எழுதி இயக்கிய இந்தப் படம், கிட்னி திருட்டு மற்றும் அதிகார அநீதிகளை விமர்சிக்கும் படமாக அமைந்துள்ளது.
'மை லார்ட்' படக்குழுவின் தகவல்கள்
ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், கோபி நைனார் மற்றும் ஜெயபிரகாஷ் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவை (My Lord Review) செய்துள்ளார். கோவில்பட்டி கிராமப் பின்னணியையும், மற்றும் சென்னை நகரக் காட்சிகளையும் நீரவ் ஷா அழகாகப் படம்பிடித்து காட்டியுள்ளார். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு உணர்ச்சியளிக்கும் விதமாக ஷான் ரோல்டன் சிறப்பாக இசையமைத்துள்ளார். இவரின் கிளைமாக்ஸ் BGM உள்ளிட்ட பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலமாகப் பாராட்டப்பட்டுள்ளது.
தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க வேண்டிய மனிதனின் வேதனை
இதுவே ‘மை லார்ட்’ படத்தின் அடிப்படை மையக்கருத்து. அரசு அதிகாரிகள் ஒரு சாதாரண மனிதனை நிர்வாக சீர்கேடால் உயிரிழந்தவர் என்று தவறாகப் பதிவு செய்வதால் அவரது அடையாள அட்டைகள், வங்கிக் கணக்குகள், மற்றும் சொத்து உரிமைகள் எல்லாம் செயலிழக்கின்றன. தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க ஆவணம் வேண்டும் என்ற இக்கட்டான மற்றும் ஆபத்தான (My Lord Review) சூழலில் அவன் நீதிமன்றத்தை நாடுகிறான். ஒரு சாதாரண மனிதனின் அடையாளமே அதிகார அமைப்பால் அழிக்கப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும்? மற்றும் அந்த நிலைமையில் சட்டமும் சமூகமும் அந்த மனிதனை எப்படி எல்லாம் திரும்பிப் பார்க்கும்? என்ற இந்த இரு கேள்விகளுக்கும் நெஞ்சை நெருடும் வகையில் பதிலளிக்கும் விதமாக கிட்னி திருட்டு மற்றும் அதிகார அநீதிகளை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் முத்துச் சிற்பியாக வாழ்ந்துள்ளார் (My Lord Review)
சசிகுமார் சாதாரண மனிதனாகவும், மற்றும் குடும்பதாரராகவும் தனது நடிப்பில் நல்ல ஒரு தாக்கத்தை நமக்கு ஏற்படுத்துகிறார். சசிகுமார் முத்துச் சிற்பி என்ற கதாபாத்திரமாகவே மாறி உயிர் கொடுத்து நடித்துள்ளார். அவரது நடிப்பு படத்திற்கு ஒரு நல்ல உயிரோட்டத்தை கொடுத்துள்ளது. குரு சோமசுந்தரம், சைத்ரா ஜே. ஆச்சார் மற்றும் ஆஷா சரத் ஆகியோரும் தங்களது வலுவான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளனர்.
நல்ல ஓப்பனிங் மற்றும் விறுவிறுப்பான கிளைமாக்ஸ் கொண்ட படம்
இப்படம் கிட்னி திருட்டு மற்றும் ஏழையின் சிக்கல்களை யதார்த்தமாகக் காட்டுகிறது. எளிய மனிதர்களின் வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சமூக அநீதி, அதிகார திமிர், மற்றும் ஏழை சுழல் சிக்கல்கள் சொல்லப்பட்டு (My Lord Review) இருக்கிறது. மேலும் மனித அன்பு, அதிகாரம், சமூக நீதி போன்ற கருப்பொருள்களை சிறப்பாக இப்படம் சித்தரித்துள்ளது.
'மை லார்ட்' பற்றிய பொதுவான விமர்சனங்கள்
- நல்ல ஓப்பனிங் மற்றும் விறுவிறுப்பான கிளைமாக்ஸ் சிறப்பை பெற்றுள்ள இப்படத்தின் நடுப்பகுதி சொதப்பலாக இருக்கிறது.
- ‘மை லார்ட்’ ஒரு நல்ல சேதி சொல்லும் சமூக நீதி படம்.
- இப்படம் மனித அன்பு, அதிகாரம், சமூக நீதி போன்ற கருப்பொருள்களை சிறப்பாக சித்தரித்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் உணர்ச்சியாக உள்ளது.
- இப்படத்தின் கதை, இயக்கம், இசை, ஒளிப்பதிவு அனைத்தும் சிறப்பாக உள்ளது.
- கிட்னி திருட்டு மற்றும் அதிகார அநீதிகளை மையமாகக் கொண்ட படம்.
- சில காட்சிகளில் இடம் பெறும் அதிகமான உரையாடல்கள் மற்றும் மெளன நாடகக் காட்சிகள் கதையின் வேகத்தை குறைத்து மந்தமாக்குகிறது.
- இப்படத்தின் நீளம் 2 மணி 28 நிமிடங்கள் ஒரு குறையாக தெரிகிறது.