Gistak Media – Cinema News | Trending News | Latest News

Nallathor Veena Book Review : நல்லதோர் வீணை புத்தக விமர்சனம்

ஆசிரியர் லட்சுமி எழுதிய நல்லதோர் வீணை புத்தகத்தில் (Nallathor Veena Book Review) இந்த கதை மட்டுமல்லாமல் என் பெயர் T.G.கார்த்திக் என இரண்டு கதைகளை கொண்டுள்ளது.  

நல்லதோர் வீணை

முதல் கதையான நல்லதோர் வீணையில் நாயகி அகிலா தன் தந்தையின் குதிரைப் பந்தயப் (Nallathor Veena Book Review) பழக்கத்தால் தடுமாறி, முதலாளியின் பணத்தை களவாடி பந்தயத்தில் தோற்றுப்போய் தவறு செய்தோம் என்று தடுமாறி நிற்க, இந்நேரத்தில் தொழில் முறை நண்பனால் தன் மகளுக்கு பணமும் நகையும் தந்து மனம் பேச வரும் வரனைப் பற்றி விசாரிக்காமல் அடுத்த தவறாக பெண்ணை திருமணம் செய்து கொடுக்கிறார். பொறுப்பற்ற அப்பாவை நம்பி, தம்பி தங்கைகளை விட்டுப் பிரிய மனமில்லாமல், தாய் உயிரோடு இருந்த போது தன் தம்பி ராமுவை (தாய்மாமா) மணந்து கொள்ளச் சொன்னது, இந்தக் கல்யாணம் சரியில்லை என்று நினைக்கத் தொடங்குகிறாள் நாயகி.

அகிலா பக்கத்து வீட்டு தாத்தா சுவாமிநாதனின் உதவியுடன், தன் மாமா வேலை செய்யும் மெக்கானிக் ஷெட்டுக்கு கடிதம் எழுதி, தன்னை புகுந்த வீட்டில் கொடுமை செய்வது வெளிப்படுத்துகிறாள். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை இறுதியில் முடித்துள்ளனர். ஆசிரியர் லட்சுமி அவர்கள் அகிலாவை மீட்ட ராமு பழுதுபார்க்க வேண்டிய அவசியமில்லாமல் நல்லதொரு வீணையாகவே சேர்த்துவிடுகிறார்.

என் பெயர் T.G.கார்த்திக் (Nallathor Veena Book Review)

இந்தக் கதையில் நாயகி சகுந்தலா தன்னுடன் மருத்துவமனையில் பணிபுரியும் கோவிந்தராஜனை, தன்னை அம்மா, அப்பா போல வளர்த்த அண்ணன் அண்ணியிடம் கூட கூறாமல் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கிறார். சகுந்தலா தனக்கு திருமணமாகி தான் தாய்மை அடைந்திருப்பதையும் சொல்ல, அண்ணன் அண்ணியுடன் கோவிந்தராஜனின் வீட்டிற்கு வருகிறாள். கோவிந்தராஜன் தன் தந்தையின் போதனையால் (Nallathor Veena Book Review) சகுந்தலாவை தெரியாது என கூறி சாதித்து விடுகிறான். தன்னுடன் மருத்துவப் படிப்பில் உடன் படித்த ஆப்பிரிக்கா தோழியான நிம்மி உதவியுடன் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் வேலைக்கு சேர்கிறாள். எட்டு வருடங்கள் கழித்து சகுந்தலா தன் அண்ணன் மகளின் திருமணத்திற்காக தன் மகன் கார்த்திக்குடன் மூன்று மாத விடுப்பில் வருகிறாள்.

எதிர்பாராத விதமாக திருமண மண்டபத்தில் உண்மை தெரியாமல் கோவிந்தராஜனும் கார்த்திக்கும் சந்தித்து மாமா என்று அழைத்து நட்பு கொள்கிறார்கள். அது தன் மகன் என்று தெரிந்ததும் பாசத்திற்கு (Nallathor Veena Book Review) ஆசைப்பட்டு தந்தை என காட்டிக்கொள்ளாமல், மனைவியின் அனுமதியுடன் குழந்தையை வெளியில் அழைத்து செல்கிறான். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதும், இதனால் தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகள், திருமணம் நின்றது பற்றியும் சகுந்தலாவிடம் சொல்லி மகனோடு சேர்ந்து வாழ விரும்புகிறேன் நீ ஏற்பாயா? என்று கேட்கிறான். இதை தொடர்ந்து சகுந்தலா என்ன செய்தால் என்பதே நூலின் கதையாகும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top