Gistak Media

Nalli Sarees Owner : நல்லி குப்புசாமியின் வெற்றிப் பயணம்!

2025ம் ஆண்டுக்கான பத்ம பத்மபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தின் தலை சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான நல்லி குப்புசாமி ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். புடவை வியாபாரம் தொழில் செய்யும் தொழில் இவரது குடும்பப் பெயர் நல்லி ஆகும்.  தென்னிந்தியாவில் மட்டுமல்லாது நாடு முழுவதும் மற்றும் தென்னிந்தியர்கள் வசிக்கும் வெளிநாடுகளிலும் நல்லி புடவை வியாபாரம் பிரபலமாக உள்ளது.   

நல்லி குப்புசாமியின் இளமைப்பருவம்

நல்லி குப்புசாமி 1940 ஆண்டு நவம்பர் 9ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவரது சிறு வயதில் தந்தை நல்லி நாராயணசாமி செட்டியார் காலமானதால் தாயார் கண்ணம்மாள் மற்றும் அவரது பாட்டனார் நல்லி சின்னசாமி செட்டியார் அரவணைப்பில் வளர்ந்தவர். பள்ளி இறுதித் தேர்வில் நல்லி குப்புசாமி அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தும் குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கல்லூரியில் படிப்பை தொடர முடியவில்லை.

Nalli Sarees Owner - GISTAK media

நல்ல தரம், நியாயமான விலை நல்லி குப்புசாமியின் வெற்றிக்கான சூத்திரம்

நல்லி குப்புசாமி அவர்களது பாட்டனார் நல்லி சின்னசாமி செட்டியார் 1928ல் சிறிய அளவில் துவங்கப்பட்ட  சேலை வியாபாரத்தை செய்து வந்தார். 1954ம் ஆண்டு, தனது 15 வயதில் குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கல்லூரியில் படிப்பை தொடர முடியாததால் பாட்டனார் நல்லி சின்னசாமி செட்டியாரின் சேலை வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நல்ல தரம், நியாயமான விலை, மற்றும் காலத்திற்கேற்ற மாறுதல் இவற்றை வெற்றிக்கான சூத்திரமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார். அந்த சிறப்பான செயல்பாட்டின் பலனாகத்தான், 1928ல் சிறிய அளவில் துவங்கப்பட்ட தனது குடும்பத் தொழிலை, இன்று தென்னிந்தியாவில் மட்டுமல்லாது நாடு முழுவதும் மற்றும் தென்னிந்தியர்கள் வசிக்கும் வெளிநாடுகளிலும் நல்லி குப்புசாமி அவர்கள் பிரபலமாக்கியிருக்கிறார்.

நல்லி குப்புசாமி சிறந்த முறையில் தொழில் விரிவாக்கம் செய்தார்

பாட்டனார் நல்லி சின்னசாமி செட்டியாரின் 200 சதுர அடியில் அமைந்திருந்த கடையைத் தன் அயராத உழைப்பினாலும் இனிய வாடிக்கையாளர் உறவினாலும் மூன்று தளங்களில், 30,000 சதுர அடிக்கு, ஒரு தெருவிலிருந்து மறு தெருவுக்கு நல்லி குப்புசாமி அவர்கள் விரிவு செய்தார். தற்போது சென்னையில் ஐந்தாவது கிளையையும் திறந்திருக்கிறார். நல்லியின் கிளைகள் ஆனது மும்பை (இரண்டு), ஹைதராபாத், பெங்களூர் (நான்கு), கோயம்புத்தூர், திருச்சி, மதுரை (இரண்டு), திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலும் உள்ளது. இவர் விரைவில் அஹமதாபாத் நகரிலும் நல்லியின் கிளையை திறக்க இருக்கிறார்.  

Nalli Sarees Owner : நல்லி குப்புசாமி பெற்ற விருதுகள்

  • சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் ‘சிறந்தவாடிக்கையாளர்’ விருது.
  • நல்லி குப்புசாமி பெற்ற பட்டங்கள் – ‘உழைப்பின் சிகரம்,’ ‘உடை வணிகச் சக்ரவர்த்தி,’ ‘துடிப்பான இந்தியர்,’ ரத்னா, மற்றும் ‘சரித்திர வர்த்தக மாமணி’.
  • அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம்.
  • தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது.
  • மத்திய அரசின் ‘பத்மபூஷன்’விருது.

நல்லி குப்புசாமி பொது வாழ்வில் ஆற்றிய பணிகள்

 

  • திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
  • மயிலை கபாலீஸ்வரர் ஆலய அறங்காவலர் குழுத் தலைவராக மூன்று முறை பணியாற்றியுள்ளார்.
  • கோவை பாரதியார் பல்கலைக் கழக செனட் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
  • மாநில அரசுகள் சார்ந்த தென் மாநிலங்கள் பண்பாட்டுப் பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
  • மத்திய அரசின் பட்டு வாரிய உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
  • தமிழ் வர்த்தக சங்கத் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
  • சமய நல்லிணக்கத்தைப் போற்றும் ஹார்மனி இந்தியா அமைப்பின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
  • ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா, ஸ்ரீ கிருஷ்ண கான சபா, பிரம்ம கான சபா, முத்ரா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், போன்ற அமைப்புகளின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

நல்லி குப்புசாமி 2025ம் ஆண்டுக்கான பத்ம பத்மபூஷன் விருது பெற்றுள்ளார்

2025ம் ஆண்டுக்கான பத்ம பத்மபூஷன் விருது பெற்றுள்ள தொழிலதிபர் நல்லி குப்புசாமி அவர்கள் எத்தனையோ கல்வி நிலையங்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் சிறந்த முறையில் பொருளுதவி செய்து வருகிறார். தொழிலதிபர் நல்லி குப்புசாமி அவர்கள் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் நன்கு அறிந்தவர்.

 

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top