Gistak Media

NASA Mars Farming Plan : மனித கழிவிலிருந்து உணவு.. செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய நாசா திட்டம்.!

நாசா விஞ்ஞானிகள் BLISS (Bioregenerative Life Support System) என்ற தொழில்நுட்பத்தின் (NASA Mars Farming Plan)  மூலம், செவ்வாய் மண்ணில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, விவசாயத்திற்கு ஏற்ற மண்ணாக செவ்வாய் மண்ணை மாற்ற முயற்சிக்கிறார்கள். விண்வெளியில் விவசாயம் செய்யக்கூடியதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறும் நாசா விஞ்ஞானிகள் அரிஜோனா யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த விவசாய ஆராய்ச்சியில் ஈடுபடப் போகிறார்கள். விண்வெளியில் சுயசார்புடன் உணவு உற்பத்தி செய்ய இந்த ‘கழிவு-உரம்’ தொழில்நுட்பம் ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.

கரடுமுரடான மண்ணை மென்மையான விவசாய மண்ணாக மாற்றும் முயற்சி

இந்த முயற்சி ஆனது பயிர் செய்ய முடியாதபடி நச்சுத்தன்மையுடனும் மற்றும் கூர்மையான கண்ணாடித் துகள்கள் போலவும் உள்ள செவ்வாய் கிரகத்தின் கரடுமுரடான மண்ணை மென்மையான விவசாயத்திற்கு ஏற்ற மண்ணாக மாற்றும்  ஒரு அற்புதமான முயற்சி ஆகும்.  இந்த செவ்வாய்கிரகத்து கரடுமுரடான மண்ணை, ‘வேதியியல் சிதைவு’ (Chemical Weathering) மூலம் மென்மையான விவசாய மண்ணாக மாற்ற மனிதக் கழிவுகள் நன்றாக உதவுகின்றன. இந்த முறையில், மனிதக் கழிவுகள் ஆனது நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு, செவ்வாய் மண்ணுடன் கலந்து ஊட்டச்சத்து மிக்க மண்ணாக மாற்றப்படுகிறது. இந்த முயற்சி ஆனது மண்ணின் துகள்களைச் சிறியதாக்கி, தாவரங்களின் வேர்கள் எளிதாக வளர வழிவகுக்கும் என்று டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக் கழக ஆய்வு கூறுகிறது.

மனிதக் கழிவுகள் மறுசுழற்சியால் உரமாக மாறுகிறது (NASA Mars Farming Plan)

மனிதக் கழிவுகள் ஆனது நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு, செவ்வாய் மண்ணுடன் கலந்து ஊட்டச்சத்து மிக்க மண்ணாக மாற்றப்படும்போது மனிதக் கழிவுகளில் உள்ள நைட்ரஜன், மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் (NASA Mars Farming Plan) தாவரங்களுக்கு ஏற்ற உரமாக பயன்படும். இவை செவ்வாய் மண்ணை தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற ஊட்டச்சத்து மிக்க மண்ணாக மாற்றுகிறது.

NASA Mars Farming Plan - Gistakmedia

பொருத்தமான தாவர தேர்வு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

விண்வெளியில் கடுமையான கதிர்வீச்சுக்கள் எப்பொழுதும் இருக்கும் என்பதால் அவற்றிலிருந்து தாவரங்கள் ஆனது பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டிய சூழல் உள்ளது. அதனால் என்னென்ன தாவரங்கள் மற்றும் என்னென்ன விதைகள் பொருத்தமானவை என்று தேர்ந்தெடுப்பதற்கான ஆராய்ச்சிகள் ஆனது நடைபெற்று வருகின்றன.   

இது நிலவிலும் விவசாயம் செய்ய உதவும் திட்டமாகும்

நாசா விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பமானது செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்லாமல், நிலவிலும் விவசாயம் செய்ய உதவும் ஒரு சிறந்த திட்டமாகும் என்று கூறுகின்றனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நிலவில் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான உணவை அங்கேயே உற்பத்தி செய்து கொள்ள முடியும். தற்போது இதற்கான சோதனைகள் பூமியில் நடைபெற்று வந்தாலும், சர்வதேச விண்வெளி (NASA Mars Farming Plan) நிலையத்தில் தங்கி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் விண்வெளிவீரர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட உள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top