Gistak Media

Nasa Produce Oxygen On Mars : செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உருவாக்க நாசா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை, அங்கேயே உற்பத்தி செய்வதற்கான ஒரு புதிய தொழில்நுட்பத்தை நாசா விஞ்ஞானிகள் (Nasa Produce Oxygen On Mars) ஆராய்ந்து வருகின்றனர். விண்வெளியில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் என்பது மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் இந்த ஆக்சிஜனை நீண்ட தூர விண்வெளி பயணங்களுக்கு பெரிய சிலிண்டர்களில் அடைத்து எடுத்து செல்வது என்பது சாத்தியமற்றது. இதனால் விண்வெளி பயணத்தின்போது, விண்வெளி வீரர்கள் சுவாசிக்க தேவையான, ஆக்சிஜனை அங்கேயே உற்பத்தி செய்ய வேண்டும். இதற்காக, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இயந்திரங்கள் பெரிதாகவும், சிக்கலாகவும் உள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் 96 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு இருப்பதால் இந்த கார்பன் டை ஆக்சைடை பிரித்து, ஆக்சிஜனாக மாற்றுவது என்பது ஒரு சாத்தியமான முறையாகும்.

இந்த சிக்கலை சமாளிப்பதற்காக நாசாவின் ”இன்னோவேடிவ் அட்வான்ஸ்ட் கான்செப்ட்ஸ்” திட்டத்தின் கீழ் புதிய ஆய்வு ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த புதிய காந்த தொழில்நுட்பத்தின் மூலம் தண்ணீரை சுழற்சி முறையில் உட்படுத்தி, மிகவும் சக்திவாய்ந்த காந்தங்களை பயன்படுத்தி, அதில் இருந்து ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனை நாசா ஆய்வாளர்கள் பிரிக்கிறார்கள். மேலும் இது எந்தவித அசைவும் இல்லாமல் செயல்படுவதால், செவ்வாய் கிரகத்தின் நுண்ஈர்ப்பு விசையில் இதனை பராமரிப்பது மிகவும் எளிதாகும்.

Nasa Produce Oxygen On Mars - Gistakmedia

50 சதவீதம் எடை குறைப்பு (Nasa Produce Oxygen On Mars)

இதற்கு முன் நாசாவின் பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து சாதனை படைத்தது. இந்த காந்த தொழில்நுட்பமானது, தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்களின் எடையை விட சுமார் 50 சதவீதம் வரை குறைக்கும் என நாசா விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள். விண்வெளியில் ஒரு நாளைக்கு 4 விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினருக்கு சுமார் 3.36 கிலோகிராம் ஆக்சிஜன் தேவைப்படும். நாசாவின் இந்த காந்த தொழில்நுட்பம் வெற்றி பெரும் பட்சத்தில் (Nasa Produce Oxygen On Mars) ஆக்சிஜன் உற்பத்தியுடன் மட்டும் நின்றுவிடாமல், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள பனிக்கட்டிகளை பயன்படுத்தி நேரடியாகவே ஆக்சிஜன் மற்றும் எரிபொருளை உற்பத்தி செய்ய இந்த காந்த தொழில்நுட்பம் உதவும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த காந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் செவ்வாய் பயணங்களுக்கும், அங்கு மனிதர்கள் தங்களின் நிரந்தர வாழ்விடத்தை உருவாக்குவதற்கும் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top