NASA Rover Discovery : செவ்வாய் கிரகத்தில் பண்டைய உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளில் பண்டைய காலங்களிலேயே உயிர்கள் வாழ்ந்ததற்கான (NASA Rover Discovery) தடயங்களை கண்டறிந்துள்ளது. இந்த பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர நாசா விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. பூமியை போல் மற்ற கோள்களில் மனித உயிர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என்பது குறித்த ஆய்வில் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ‘சிவப்பு கிரகம்’ என அழைக்கப்படும் செவ்வாய் கோளில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பன்னெடும் ஆண்டுகளுக்கு முன் உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் சிக்கியுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அதாவது, செவ்வாய் கிரகத்தில் பழமை வாழ்ந்த ஆற்றுப் படுகையில் நுண்ணிய உயிரினங்களின் தடயங்கள் கொண்ட பாறைகளை பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் கண்டுபிடித்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் (NASA Rover Discovery)
கடந்த 2021-ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம், ஜெசரோ பள்ள தாக்கில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆற்றின் படுகையில் இருந்து சேகரித்துள்ள மாதிரிகளில் கரிம கார்பன், இரும்பு பாஸ்பேட் மற்றும் இரும்பு சல்பைட் உள்ளிட்ட வேதியியல் கலவைகள் இருப்பதை (NASA Rover Discovery) கண்டறிந்துள்ளது. பூமியில் இருக்கும் நுண்ணுயிரிகள் கரிமப் பொருட்களை சிதைக்கும்போது, இந்த வேதிப்பொருட்கள் உருவாகின்றன. இந்த கண்டுபிடிப்பு குறித்து ஆய்வாளர் ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் இதுவரையிலான ரோவரின் தேடலில், பண்டைய கால வாழ்க்கைக்கான மிகச்சிறந்த மற்றும் மிகவும் உறுதியான தடயம் இதுவே என தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர அதிக செலவாகும், இதன் காரணமாக பூமிக்கு கொண்டு வரும் திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுத் திட்டங்களை நாசா ஆராய்ந்து வருகிறது. இந்த மாதிரிகள் பூமிக்கு கொண்டு வந்து ஆராய்ந்த பின்னரே, செவ்வாய் கிரகத்தின் பண்டைய வரலாற்றையும், அதில் உயிரினங்கள் இருந்ததா என்பதை பற்றிய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Latest Slideshows
-
TNPSC Group 2 & 2A Exam Postponed : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி.. தமிழகம் முழுவதும் தேர்வுகள் தள்ளிவைப்பு.!
-
India Beat USA T20 WC : டி20 உலககோப்பை.. அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றிகரமான தொடக்கம்..!
-
With Love Review : பழைய காதலைத் தேடும் பயணமா? 'வித் லவ்' திரை விமர்சனம்.!
-
India U19 Champions 2026 : யு19 உலகக்கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தி 6வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
India T20 World Cup Fixtures : டி20 உலகக் கோப்பை.. இந்திய அணி ஆடும் போட்டிகளின் முழு அட்டவணை விவரம்?
-
WPL 2026 Final : மகளிர் ஐபிஎல்.. டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது ஆர்சிபி..!
-
Murugappa Group : 125 ஆண்டுகள் வரலாறு கொண்ட "முருகப்பா குழுமத்தின்" வெற்றிப் பயணம்.!
-
Postal Department Jobs 2026 : அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! உடனே விண்ணப்பிங்க.!
-
India U19 WC Final : U19 உலகக்கோப்பை.. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி FINAL சென்றது இந்தியா.!
-
Hair Thin Fiber Chip : மனித முடியை விட மெல்லிய 'கணினி சிப்'.. சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!