NASA's Human Exploration Rover Challenge - இந்திய மாணவர்கள் குழு வெற்றி பெற்றது
NASA's Human Exploration Rover Challenge போட்டியில் இந்திய மாணவர்கள் குழு விருதுகளை பெற்றுள்ளன :
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மனித ஆய்வு ரோவர் சவால் (Human Exploration Rover Challenge – HERC) போட்டி ஆனது நடத்தப்படுகிறது. இந்த NASA’s Human Exploration Rover Challenge போட்டி ஆனது பொறியியல் வடிவமைப்பு சவாலைக் கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 72 அணிகள் கலந்து கொண்டன. இந்தியா மற்றும் அமெரிக்கா உள்பட 13 நாடுகளைச் சேர்ந்த 42 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் 30 உயர்நிலை பள்ளிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன. மொத்தம் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏப்.19,2024 மற்றும் ஏப்.20,2024 ஆகிய தேதிகளில் லபாமாவின் ஹண்ட்ஸ்வில்லில் உள்ள நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்திற்கு அருகில் இப்போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது.
NASA-வின் இன்ஜினியர்களுடன் இணைந்து பல பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு மதிப்பாய்வுகளை முடித்து அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த கனகியா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர் அணியும் மற்றும் டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி மாணவர் அணியும் Human Exploration Rover Challenge விருதுகளை பெற்றுள்ளன. மும்பையைச் சேர்ந்த கனகியா இண்டர்நேஷனல் பள்ளி ரூக்கி ஆஃப் தி இயர் என்ற விருது பெற்றுள்ளது. டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மனித ஆய்வு ரோவர் போட்டியில் Crash And Burn என்ற விருது பெற்றுள்ளது. NASA-வின் மனித ஆய்வு ரோவர் சவால் செயல்பாட்டை வழிநடத்தும் வெமித்ரா அலெக்ஸாண்டர், “இளம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை ஊக்குவிக்கும் ஒரு தளமாக NASA’s Human Exploration Rover Challenge செயல்படுகிறது. மாணவர்களுக்கு அறிவியல் அனுபவங்களை இது வழங்குகிறது. மேலும் இது புதுமையான சிந்தனையை வளர்க்க உதவுகிறது” என்று கூறினார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!