Gistak Media

Neelira Movie Review : போரின் கொடூர உளவியலை பேசும் ‘நீளிரா’..

இப்படம் ஆனது வடக்கு இலங்கையில் நடந்த ஈழப்போரின் உச்சகால கட்டத்தில் வாழ்ந்த ஒரு கலைஞரின் சொந்த வாழ்க்கையிலிருந்து உருவான திரைப்படம் ஆகும். இதுவரை வெளியான ஈழப்போர் குறித்த பல படங்களின் வரிசையில் இப்படமானது முதல் சர்வதேசத் தரத்திலானத் தமிழினப் படமாக பார்க்கப்படுகிறது.

போரின் கொடூர உளவியலை பேசும் ஒரு சக்திவாய்ந்த திரைக்கதை

போரின் கோரமான உளவியலை, மனிதர்களின் உணர்வுகளை, பயத்தை, நம்பிக்கையை, மற்றும் காதலை இந்த நீளிரா திரைப்படத்தின் திரைக்கதை ஆனது   தெளிவாக வெளிப்படுத்துகிறது. அந்த போர்க்கால கட்டத்தில் ஒரு திருமணம் நடைபெறும் இரவில் நடக்கும் சம்பவங்களை சுற்றி திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இலங்கைவாழ் எளிய தமிழ்க் குடும்பம் தங்களது பெண் வாசுகிக்குத் திருமணம் செய்து அவரைப் பத்திரமாக கடல் கடந்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க திட்டமிடுகிறது.

இந்த திட்டமிட்ட திருமணத்திற்கு முந்தைய நாளின் இரவில் போராளிகளைத் தாக்கத் திட்டமிடும் இந்திய அமைதிப்படைப் பிரிவு, வழிதவறித் தற்செயலாகத் இந்த திருமண வீட்டிற்குள் நுழைகிறது. அந்த திருமண வீட்டில் இந்திய ராணுவம் பதுங்கியிருப்பதை அறிந்த போராளிகள் அவர்களைத் தாக்கத் திட்டமிடுகின்றனர்.  இந்த இரு தரப்புக்கும் இடையே ஆயுதங்கள் எதுவும் ஏந்தாத ஒரு சாமானியக் குடும்பம் மாட்டிக் கொள்கிறது. அந்த நீண்ட இரவுப் பொழுதானது கடந்து அதிகாலைக்குள் திருமணம் நடந்ததா இல்லையா என்பதே இப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகும்.

Neelira Movie Review : இயக்குநர் சோமீதரனின் கலை நுணுக்கம்

Neelira Movie Review - GISTAK media

ஈழத் தமிழரான இயக்குநர் சோமீதரன் அந்த மண்ணில் தான் ஒரு குழந்தையாக வாழ்ந்தபோது கண்ட போர்க்கால அனுபவங்களையும் மற்றும் நினைவுகளையும் மையமாகக் கொண்டு இத்திரைப்பட கதையை உருவாக்கியுள்ளார்.  இவர் பிபிசி பத்திரிகையாளராகவும் மற்றும் ஆவணப்பட இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் ஈழ மக்களின் கலாச்சார நுணுக்கங்களை இந்தப் படத்தில் கனக்கச்சிதமாக கையாண்டுள்ளார். இவர் திரைக்கதையை மிகவும் நம்பகத்தன்மை உடையதாக சொல்லி இருக்கிறார்.

நீளிரா திரைப்படத்தின் கலைஞர்களின் பட்டியல்

சிந்து குமரேசன், நவீன் சந்திரா, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, மற்றும் விது ஆகியோர் நடித்துள்ளனர். செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே-யின் இசை, ராதா ஸ்ரீதரின் படத்தொகுப்பு ஆகியவை திரைப்படத்திற்கு சிறப்பை வழங்கியுள்ளன.

Neelira Movie Review : மணித இன உணர்வு உள்ள ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்

இது மணித இன உணர்வு உள்ள ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு ஆகும். திரைக்கதையின் விறுவிறுப்பைக் குறைக்காமல் உலக அரசியலையும் ஈழ மக்களின் வலியையும் இணைத்துச் சிறப்பாக இப்படம் சித்தரித்துள்ளது. இத்திரைப்படமானது நேரடியாக போரின் வன்முறையைப் பெரிய அளவில் ரத்தமும் சதையுமாக காட்டாமல், அந்தச் சூழலில் வாழ்ந்த மக்களின் உளவியல் ரீதியான பாதிப்புகளையும் மற்றும் நுட்பமான வாழ்வியல் மாற்றங்களையும் ஆழமாக பிரதிபலிக்கிறது. அதாவது மக்களின் அன்றாட வாழ்க்கையில் உள்ள சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை எல்லாம் எப்படிப் பாதித்தது என்பதைக் காட்டுகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top