Nellikai Benefits in Tamil: நெல்லிக்காய் பயன்கள் மற்றும் அதன் 5 மருத்துவ குணங்கள்
நெல்லிக்காயில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் அதிகளவில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இலவங்கப்பட்டை பொடியை விட இரண்டு மடங்கு ஆக்ஸிஜனேற்ற பண்பு அதிகம் கொண்டது. அதனால்தான் நெல்லிக்காயை அற்புதமான மருந்து என்கிறோம். இதனை பரவலாக பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆயுர்வேதத்தின் படி, நெல்லிக்காய் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. நெல்லிக்காய் இரத்தத்தை சுத்திகரிக்கவும், பார்வையை மேம்படுத்தவும் பயன்படுகிறது. நெல்லிக்காய் செரிமானம் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை மேம்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதால் சர்க்கரை நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. நெல்லிக்காய் முதுமையைத் தடுக்கவும், முடி நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது.
நெல்லிக்காயை நாம் பல வழிகளில் பயன்படுத்தலாம். நீங்கள் அதை பச்சையாகவோ, ஜூஸாகவோ, மிட்டாயாகவோ அல்லது சட்டினியாகவோ சாப்பிடலாம். எப்படி எடுத்தாலும் அதன் பலன்கள் மாறாது. தற்போது நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி காணலாம்.
நெல்லிக்காய் பயன்கள் (Nellikai Benefits in Tamil)
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
அந்த காலத்தில் இருந்ததே எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முன்னோர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தனர். நெல்லிக்காயில் ஊறுகாய் மற்றும் சட்னி ஆகிவற்றை சாப்பிட்டனர். நெல்லிக்காயில் வைட்டமின் C அதிகளவு நிறைந்துள்ளது. வைட்டமின் C ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷ பிரச்சனைகள் நீங்கும். மேலும் இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் துவர்ப்பு பண்பு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனை நீங்க
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டியும் குறையும். அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்லது. இது உங்களுடைய முழு செரிமான அமைப்பையும் சீராக இயங்க வைக்கிறது. நெல்லிக்காயில் செரிமான அமைப்பை ஆதரிக்கும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. மேலும், நெல்லிக்காய் இரைப்பை மற்றும் செரிமான மண்டல சுரப்பிகளுக்கும் உதவுகிறது. இதை உண்பதால் உணவு செரிமானமடைகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.
எலும்புகளை வலுவாக்க உதவுகிறது
நெல்லிக்காயில் ப்ரோ-அபோப்டோசிஸ் என்ற பண்பு உள்ளது. இது கட்டி அல்லது வைரஸ் செல்களை அகற்ற உதவுகிறது. இந்த பண்பினால் மூட்டு வீக்கம் போன்றவற்றை தடுக்கிறது.எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது தவிர மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற பொதுவான பிரச்சனைகளை குணப்படுத்த இது உதவுகிறது.
கண்களில் சர்க்கரை வியாதியை குறைக்க
சர்க்கரை நோய்களுக்காக ஆயுர் வேதத்தில் ஆயிரம் வருடங்களுக்கு அதிகமாக நெல்லிக்காயை பயன்படுத்தி வருகின்றனர். நெல்லிக்காயில் இருக்கும் பீட்டா குளுக்கோன் AKR1B1எனப்படும் சர்க்கரை வியாதியினால் கண் பார்வையை குறைபாடு செய்யும் என்சைம்களை குறைக்க உதவுகிறது.
ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க
உடலில் ஓடும் இரத்த கழிவுகளை வடிகட்டி சிறுநீரகங்கள் வெளியேற்றுகிறது. ஒரு சிலருக்கு சிறுநீர் வெளியேற்றுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. இவ்வாறான பிரச்சனை இருப்பவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதால் பிரச்சனை நீங்கும்.
அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம், நாகரிக வளர்ச்சி, சரியான தூக்கமின்மை, கண்ட உணவுகளை உட்கொள்வது இது போன்ற பிரச்சனைகளால் மனிதர்களுக்கு பல விதமான நோய்கள் வருகிறது. இதில் குறிப்பாக ஒன்று ஆண்மை குறைவு ஆகும். இன்றைய காலத்தில் 30 வயதை தாண்டுவதற்குல்லையே பலருக்கு இந்த பிரச்சனைகள் வந்துவிடுகிறது. இதனை சரிசெய்வதற்கான நெல்லிக்காயை பொடியாக்கி இரவில் தூங்கும் முன் உட்கொண்டபிறகு பாலில் சேர்த்து குடித்து வந்தால் விறைப்பு தன்மை கோளாறு, விந்து எண்ணிக்கை குறைவு போன்ற பிரச்சனைகள் வாராது. இதன் மூலம் ஆண்மை பிரச்சனை சரியாகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!