Nepolean Donates 1 Cr To Nadigar Sangam : நடிகர் சங்க கட்டிட பணிக்கு 1 கோடி வழங்கிய நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் தென் இந்திய நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி ரூபாய் (Nepolean Donates 1 Cr To Nadigar Sangam) நன்கொடை அளித்துள்ளார்.
நடிகர் சங்க புதிய கட்டிடம் :
தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வால், நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால், கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளன. இப்பணியை முடிக்க, 40 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி. அவரைத் தொடர்ந்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ரூ.1 கோடிக்கான காசோலையை பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகர் விஜய்யும் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இவரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.
Nepolean Donates 1 Cr To Nadigar Sangam :
இந்த நிலையில் நடிகர் சங்கம் கட்டுவதற்கு பிரபலங்கள் பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சங்க கட்டுமான பணிக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி (Nepolean Donates 1 Cr To Nadigar Sangam) அளித்துள்ளார். இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென் இந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், கடந்த 2000 – 2006 காலகட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர் நெப்போலியன். நடிகர் சங்க கட்டிடத்தின் வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000/- (ஒரு கோடி ரூபாய்) வைப்பு நிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
Latest Slideshows
-
Candidates Chess 2026 : கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி.!
-
Sambadi Aattam Book Review : மாரி செல்வராஜ் எழுதிய 'சம்படி ஆட்டம்' புத்தக விமர்சனம்.!
-
IPL 2026 CSK vs KKR : சென்னை அணியின் வெற்றி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
-
Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் 'விவோ டி5 ப்ரோ 5ஜி' நாளை அறிமுகம்....
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?