New Facility For Registering Deeds : இனி ஆவண எழுத்தர்கள் இன்றி பொதுமக்களே பத்திரப்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம்
இனி தமிழகத்தில் ஆவண எழுத்தர்கள், வக்கீல்கள் இன்றி பொதுமக்களே பத்திரப்பதிவு செய்யும் புதிய (New Facility For Registering Deeds) வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. பத்திரபதிவு துறையில் நடைபெறும் கையூட்டை (லஞ்சம்) ஒழிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
இடைத்தரகர்கள் தேவையில்லை
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏற்படும் காலதாமதம் மற்றும் லஞ்ச பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை களைய தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வருவாய்த்துறை சான்றிதழ்களை நேரடியாக பொதுமக்களே (New Facility For Registering Deeds) விண்ணப்பித்து, தங்களது ஆவணங்களின் அடிப்படையில் எளிதாக பெற்றுக்கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களின் கட்டிட வரைப்படங்களை யார் தயவும் இல்லாமல், சுயசான்றிதழ் முறையில் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி பெற இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்காமல் பலரின் வீடு கட்டும் திட்டம் எளிதாக நிறைவேறி வருகிறது.
பொதுமக்களே பதிவு செய்யலாம் (New Facility For Registering Deeds)
பொதுமக்கள் 1950-ம் ஆண்டு முதல் நகல் பத்திரங்களும் மற்றும் 1975-ம் ஆண்டு முதல் வில்லங்க சான்றிதழ்களும் எளிமையாக https://tnreginet.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் திருமண பதிவு நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்களே நேரடியாக விண்ணப்பித்து சான்றிதழ் பெற்று கொள்ளலாம். தற்போது அதன் அடுத்தக்கட்டமாக பொதுமக்களே ஆவணங்களை (New Facility For Registering Deeds) நேரடியாக தாக்கல் செய்யும் வழிமுறையை பத்திரப்பதிவுத்துறை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் இதுவரை வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய ஆவண எழுத்தர்கள், வக்கீல்கள் மூலமே ஆவணங்களை பதிவு செய்யும் நிலை இருந்தது. ஆனால் இனி பொதுமக்களே நேரடியாகவே தங்களின் ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான சீரமைப்பு பணிகள் வெப்சைட்டில் செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் ஆவணங்களின் வகை மற்றும் பாகப்பிரிவினை போன்றவற்றை முதலில் பதிவு செய்ய வேண்டும். பிறகு விற்பவர் பெயர், வாங்குபவர் பெயர், சர்வே எண், பத்திரப்பதிவு அலுவலகம், நிலம் அமைந்திருக்கும் கிராமம், நிலத்தின் அளவு போன்ற உள்ளீடுகளை பதிவு செய்தால் ஆவணம் தானாக உருவாகும் வகையில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!