Gistak Media

New Income Tax Rules 2026: யாருக்கு லாபம்? யாருக்கு  நஷ்டம்? முழு விவரம்

பழமையான 60 ஆண்டுக்கு முந்தைய 1961 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு பதிலாக ‘புதிய வருமான வரி சட்டம் ஆனது வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

New Income Tax Rules 2026: புதிய வருமான வரி சட்டத்தின் சிறப்பம்சங்கள்

இது சட்டம் வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லாமல் வரி விதிகளை எளிமைப்படுத்திய புதிய வருமான வரிச் சட்டம் ஆகும்.  இது வரி விதிமுறைகளை எளிமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வரி செலுத்துவோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிக்கலான பிரிவுகளை குறைக்கவும் செய்துள்ளது.

நடைமுறை “ஆடிட்” முறைகள், மற்றும் பணம் செலுத்தும் கட்டுப்பாடுகள் போன்றவற்றை மாற்றியுள்ளது. இந்த புதிய வருமான வரிச் சட்டத்தில் Financial Year / Assessment Year என்று பழைய சொற்களுக்கு பதிலாக “Tax Year” என்று புதிய சொல் ஆனது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  இந்த புதிய வருமான வரிச் சட்டமானது 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றி, எளிய விதத்தில் டிஜிட்டல்‑நட்பு மற்றும் குறைந்த அளவு புதிர்கள் உள்ள சட்டமாக வடிவமைத்துள்ளது.

New Income Tax Rules 2026: புதிய வருமான வரி சட்டத்தால் லாபம் பெறுபவர்கள்

New Income Tax Rules 2026 - GISTAK media

● ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள்

ரூ. 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் சிறந்த பலன்களை பெறுவார்கள். குறிப்பாக வருடந்தோறும் 4–12 லட்சம் மற்றும், 12–24 லட்சம் என்று சம்பளம் பெறும் நடுத்தர சம்பளதாரர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் உள்ளது. புதிய வருமான வரி சட்டத்தால் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை. மேலும் இந்த புதிய வரி முறை (new tax regime) ஆனது கணிசமான விடுதலையை தரும்.  

● குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வீட்டு வாடகை படி (HRA) விலக்கு

சென்னை, பெங்களூரு மற்றும் புனே போன்ற நகரங்களில் வாழும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வீட்டு வாடகை படி (House Rent Allowance) ஆனது 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

● நடுத்தர (Middle-class) குழந்தைகளின் கல்விக்கான செலவு அதிகரிப்பு

நடுத்தர வர்க்கத்தினரின் குழந்தைகளின் கல்விக்கான மாத செலவு Rs.100 – லிருந்து  Rs.3000/ month  ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

 

● நடுத்தர வர்க்க குழந்தைகளின் தங்கும் விடுதி செலவு(Hostel Allowance) அதிகரிப்பு

நடுத்தர வர்க்க (Middle-class) குழந்தைகளின் தங்கும் விடுதி செலவு (Hostel Allowance) Rs. 300 – லிருந்து  Rs.9000/ month  ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

● உணவு வவுச்சர் பெறுபவர்களுக்கு வரிவிலக்கு

உணவு வவுச்சர் பெறுபவர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு 200 ரூபாய் வரை வரிவிலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

New Income Tax Rules 2026: புதிய வருமான வரி சட்டத்தால் நஷ்டம் அடைபவர்கள்

  • ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள்.
  • வீட்டுக் கடன், HRA, மற்றும் 80C போன்ற பிரிவுகளில் அதிக அளவில் முதலீடு செய்பவர்கள்.
  • கடினமாக முதலீடு செய்து Rs.24 லட்சம் மேல் வருமானம் செய்பவர்கள் ஆகியவர்களுக்கு புதிய முறை நஷ்டமாக இருக்கலாம்.

 

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top