New Low Pressure : வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 25-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை (New Low Pressure) பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக தென்மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும், மத்திய ஆந்திர பகுதிகளின் மேல், மற்றொரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வங்கக்கடலில் வரும் 25-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செப்டம்பர் 27-ம் தேதி ஒடிசா – ஆந்திர கடலோரம் கரையை கடக்க உள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.
3 நாட்களுக்கு கனமழை (New Low Pressure)
வரும் செப்டம்பர் 25-ம் தேதி முதல் தமிழகத்தின் தேனி, நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 26-ம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாகவும், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை காலம் தற்போது முடிந்துள்ளதால் வரும் அக்டோபர் 3வது வாரத்தில் தமிழக்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனவும், மேலும் இந்த முறை வழக்கத்தை (New Low Pressure) விட மழையின் அளவு தீவிரமாகவே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழைக்கே சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!