New Solar System : "ஏலியன்" சோலர் சிஸ்டம் | நாசா கண்டுபிடித்த அந்த புதிய 7 கோள்கள்
New Solar System : அமெரிக்காவின் NASA-வை சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது புதுவிதமான கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். இது பலருக்கும் வியப்பைத் தருவதாகவே இருக்கிறது. இந்த மிகப் பெரிய பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறதா? இல்லை மற்ற வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கிறதா என்பதே இங்கே பலருக்கும் எழும் கேள்வியாகும். இதற்கான விடையைக் கண்டறிய பல வானியலாளர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் பூமியைத் தாண்டி மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஆய்வாளர்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது.
New Solar System :
NASA-வின் கெப்லர் விண்வெளி டெலஸ்கோப் ஏழு கிரகங்களைக் கொண்ட ஒரு புது சோலர் சிஸ்டத்தை (New Solar System) கண்டுபிடித்துள்ளது. இந்த ஒவ்வொரு கிரகத்தில் இருந்தும் அதிகபட்ச வெப்பம் வெளியே வருகிறதாம். அதாவது நமது சூரியக் குடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை விடவும் அந்த ஏழு கிரகங்களில் இருந்து வெளிவரும் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்பதையும் நாசா ஆய்வாளர்கள் (New Solar System) கண்டுபிடித்துள்ளனர்.
New Solar System : இதற்கு நாசா ஆய்வாளர்கள் கெப்லர்-385 என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஏலியன் சோலர் சிஸ்டத்தில் இருக்கும் அசாதாரண அமைப்பு தனித்துவமானது அதாவது இதில் இருக்கும் ஏழு கிரகங்களும் அளவில் பூமியை விடப் பலமடங்கு பெரிதாக இருக்கிறது. அதேபோல நெப்டியூனை கோளை விட அளவில் சிறியதாக இருக்கிறது. நமக்கு அருகில் இருக்கும் அனைத்து சோலஸ் சிஸ்டங்களில் இருந்தும் இந்த கெப்லர் 385 வேறுபட்டு இருக்க இதுவே முக்கிய காரணமாகும்.
கெப்லர்-385 :
பொதுவாக சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்படும் சோலர் சிஸ்டத்தில் அதிகளவில் கிரகங்கள் இருக்காது. ஆனால் ஆறுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கொண்ட ஒரு சில சோலர் சிஸ்டங்களில் இந்த கெப்லர்-385 -வும் ஒன்றாகும். கெப்லர் டெலஸ்கோப் கண்டுபிடித்த முக்கிய சோலர் சிஸ்டங்களில் இது முக்கியமானதாகவும் இருக்கிறது. இதுவரையில் கெப்லர் 385 டெலஸ்கோப் 4,400 கிரகங்கள், 700+ சோலர் அமைப்புகளைக் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கெப்லர்-385 சோலர் சிஸ்டத்தின் மையத்தில் சூரியனைப் போலவே ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அந்த நட்சத்திரம் நமது சூரியனை விட சுமார் 10% அளவில் பெரியதாகவும் 5% வெப்பமானதாகவும் இருக்கிறது. மேலும் அதில் இருக்கும் இரண்டு கிரகங்கள் பூமியை விடச் சற்றே பெரியதாக இருக்கிறது. பெரிய பாறைகளைக் கொண்ட அந்த கிரகங்களில் மெல்லிய வளிமண்டல படலங்கள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மற்ற ஐந்து கோள்களும் இதை விட பெரியதாக இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் பூமியை விடக் குறைந்தது இரண்டு மடங்கு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த கிரகங்கள் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டு இருக்கிறது. கெப்லர்-385 அமைப்பானது இந்த பண்புகளை இவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடித்துள்ளது, நாம் வானியல் துறையில் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்பதற்குச் முக்கிய சான்றாக இருக்கிறது. இது பலருக்கும் வியப்பைத் தருவதாகவே இருக்கிறது. சூரியனைப் போலவே தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரம் பல கோள்களைக் கொண்டிருந்தால் அதன் சுற்றுப்பாதைகள் அனைத்தும் வட்ட வடிவில்இருக்கும். அதேநேரம் அந்த நட்சத்திரத்தைச் சுற்றி ஒன்று அல்லது இரண்டு கோள்கள் மட்டுமே இருந்தால் அதன் பாதை பெரியளவில் வட்டமாக இருப்பதில்லை என்பதையும் நாசா ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Latest Slideshows
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!
-
Humming Bird : ஓசனிச்சிட்டு பற்றி தெரியுமா? ஆச்சரியப்படும் உண்மைகள்..!
-
Jananayagan Postponed : ‘ஜனநாயகன்’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு