-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
New Trains Between Sivagangai-Karaikudi-Thiruvarur : சிவகங்கை-காரைக்குடி-திருவாரூர் இடையே புதிய ரயில்கள் விரைவில் இயக்கம்
பல நாள் புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோரிக்கை நிறைவேறுகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை காரைக்குடி-திருவாரூர் (New Trains Between Sivagangai-Karaikudi-Thiruvarur) இடையே 3 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி,
- காரைக்குடி மயிலாடுதுறை இடையே தினசரி விரைவு ரயில்.
- திருவாரூர்-காரைக்குடி இடையே பயணிகள் ரயில்.
- செகந்திராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர விரைவு ரயில்
இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள், “இந்த 3 புதிய ரயில்கள் தொடங்கும் தேதி, நேரம் மற்றும் இயக்கம், குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஆனது விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளனர்.
தற்போது திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் எர்ணாகுளம், சென்னை, வேளாங்கண்ணி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான ரயில்கள் எல்லாம் இயக்கப்பட்டு வருகிறது. காரைக்குடி திருவாரூர் வழிதடத்தில் 75 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில்கள் அனைத்தும் தற்போது 110 கிலோமீட்டர் வேகத்திற்கு வேகத்தை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் ஆனது அனுமதி அளித்தது. திருவாரூர் காரைக்குடி இடையேயான 149.5 தொலைவு வழித்தடம் ஆனது அகல ரயில் பாதையாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தண்டவாளங்கள் மேம்படுத்தும் பணிகள் ஆனது முடிக்கப்பட்டு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி திருவாரூர் காரைக்குடி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் ஆனது நடத்தப்பட்டது. ரயில்களின் சோதனை ஓட்டம் ஆனது சுமார் 121 கிலோமீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதனை அடுத்து தற்போது அந்த வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரித்து இயக்கப்பட்டு வருகிறது.
வரப்போகும் 3 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் (New Trains Between Sivagangai-Karaikudi-Thiruvarur)
பயணிகளும் பொதுமக்களும் இந்த வழித்தடத்தில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ரயில்வே வாரியம் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மூன்று புதிய ரயில்களை (New Trains Between Sivagangai-Karaikudi-Thiruvarur) இந்த வழித்தடத்தில் இயக்க அனுமதி அளித்துள்ளது.
அதன்படி காரைக்குடி மயிலாடுதுறை இடையே தினசரி விரைவு ரயில், திருவாரூர்-காரைக்குடி இடையே பயணிகள் ரயில், மற்றும் செகந்திராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர விரைவு ரயில் என மூன்று புதிய ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்க அனுமதி அளித்துள்ளது.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!