New Vice President of India : 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று 15வது குடியரசு துணைத் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வு (New Vice President of India) செய்யப்பட்டுள்ளார். நாட்டின் 14வது துணை குடியரசு தலைவராக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற ஜகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் உடல்நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார். அவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்ததால், புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதகிருஷ்ணனும், இண்டியா கூட்டணியை சேர்ந்த சுதர்சன் ரெட்டியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தல்
இந்த நிலையில் குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தலில் முதல் வாக்கை பதிவு செய்து தேர்தலை தொடங்கி வைத்தார். மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் இந்த தேர்தலில் 781 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி (New Vice President of India)
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியை சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 15-வது துணைக்குடியரசு தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் செப்டம்பர் 12-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
மு.க.ஸ்டாலின் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், ‘இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர், இந்தியாவின் அரசியல் அமைப்பையும், சிறப்புமிக்க கோட்பாடுகளையும் உறுதியுடன் (New Vice President of India) கடைபிடித்து தனது பொறுப்புகளை நிறைவேற்றுவார் என உறுதியுடன் நம்புகிறேன்’ என சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும், மிகுந்த அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிகச் சிறந்த அங்கீகாரம் எனத் தெரிவித்திருக்கிறார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!