Nice International Film Festival : நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராசாவதி 5 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட காதல் குற்ற நாடகமான ராசாவதி சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்று உலகம் முழுவதும் பல விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது. இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள ‘ராசாவதி’ திரைப்படம் பிரான்சில் நடைபெற்ற (Nice International Film Festiva) நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 5 பரிந்துரைகளை பெற்றுள்ளது.
சுஜித் சங்கர், ரம்யா சுப்பிரமணியன், ஜிஎம் சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். படத்தின் படத்தொகுப்புப் பணிகளை வி.ஜே.சாபு ஜோசப் கையாண்டுள்ளார். சிவராஜ் கலை இயக்குநராகவும், சதீஷ் கிருஷ்ணன் நடனக் கலைஞராகவும் பணியாற்றி உள்ளனர்.
நைஸ் சர்வதேச திரைப்பட விழா (Nice International Film Festiva)
நடிகர் அர்ஜுன்தாஸ் இந்தப் படத்தில் ‘சதாசிவ பாண்டியன்’ என்ற சித்த மருத்துவராக நடித்துள்ளார். 15வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருதை இந்தப் படம் பெற்றுத் தந்துள்ளது. இது அர்ஜுன் தாஸ் ரசவதி படத்தில் நடித்ததற்காக கிடைத்த முதல் பாராட்டு அல்ல. இதே பாத்திரத்திற்காக அர்ஜுன் தாஸ் முன்னதாக 2024-ம் ஆண்டு நியூ ஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
2025-ல் நடைபெற்ற 15வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அந்த திரைப்படப் பதிவுகளிலிருந்து இந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் இந்தப் திரைப்படமானது (Nice International Film Festiva) சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட இயக்குநர், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம், சிறந்த எடிட்டிங், வெளிநாட்டு மொழி திரைப்படத்தில் சிறந்த நடிகர் மற்றும் வெளிநாட்டு மொழி திரைப்படத்தில் சிறந்த நடிகை உள்ளிட்ட ஐந்து மதிப்புமிக்க பிரிவுகளிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
லண்டன் சர்வதேச திரைப்பட விழா 2025-ல் இந்தத் திரைப்படம் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதை வென்றுள்ளது. இந்த படத்தில் பணியாற்றியுள்ள ஒலி பொறியாளர் தபஸ் நாயக்கின் பணி தனித்து நிற்கிறது. உலகெங்கிலும் இருந்து வந்த ஒன்பது படங்களின் ஒலி வடிவமைப்மை தோற்கடித்து ‘ராசாவதி’ படத்தின் ஒலி வடிவமைப்பு ஆனது வெற்றி பெற்றுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!