Nisar Satellite Launch By July 30 : இஸ்ரோ நிசார் செயற்கைக்கோளை ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது
இஸ்ரோ, நாசா குழுவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் (NISAR) செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகேட்டாவில் இருந்து ஜூலை 30-ம் தேதி (Nisar Satellite Launch By July 30) (நாளை புதன் கிழமை) விண்ணில் செலுத்துகிறது.
பூமியின் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் இணைந்து நிசார் (NISAR) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. மேலும் இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி கையெழுத்தானது. பின்னர் இரு நாடுகளின் கூட்டுழைப்பில் சுமார் 12,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளின் அனைத்து தயாரிப்பு பணிகளும் கடந்தாண்டு நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து நிசார் செயற்கைக்கோளின் பல்வேறு சோதனைகள் முடிவடைந்த நிலையில் தற்போது GSLV F-16 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகேட்டாவில் உள்ள 2-வது ஏவு தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிசார் (NISAR) செயற்கைக்கோள் நாளை ஜூலை 30-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிசார் செயற்கைக்கோள் (Nisar Satellite Launch By July 30)
நிசார் புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட முதல் அதி நவீன ரேடார் செயற்கைக்கோளாகும். இதன் எடை சுமார் 2,392 கிலோவாகும். மேலும் இதன்மூலம், புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவ நிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை மற்றும் பூமியின் மாறிவரும் சூழல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். இதற்கு உதாரணமாக பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.
12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வரும்
இந்த நிசார் செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை முழு பூமியையும் சுற்றிவந்து, துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை எந்த நேரத்திலும் வழங்கும். இதற்காக இதில் எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் என சிந்தடிக் அப்ரேச்சர் கொண்ட ரேடார் (Nisar Satellite Launch By July 30) தொழில்நுட்பங்கள் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு செயற்கைக்கோளில் இரண்டு அலைவரிசை கொண்ட கருவிகள் இடம்பெறுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும்.
நிசார் குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன்
நாம் வாழும் பூமியில் இருந்து சுமார் 242 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வரும் இந்த நிசார் செயற்கைக்கோள் எந்த விதமான காலநிலையிலும், பூமியின் மிக துல்லியமான படங்களை எடுத்துத்தரும் என்றும், இதன் மூலம் திடீரென ஏற்படும் மண்சரிவுகள் போன்ற பேரிடர்களை முன்கூட்டியே (Nisar Satellite Launch By July 30) அறிய முடியும் என்றும் நாராயணன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் நாசா குழுவுடன் இணைந்து, இந்த அதிநவீன நிசார் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், NASA ISRO Synthetic Aperture Radar என்பதன் சுருக்கமே நிசார் என்றும் தெரிவித்தார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!