NLC Staff Recruitment 2023: நெல்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு
அரசு பொதுத்துறை நிறுவனமான நெல்வேலி பழுப்பு நிலக்கரி கார்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்திய அரசுக்கு சொந்தமான பழுப்பு நிலக்கரி சுரங்கம் தமிழகத்தில் நெய்வேலியில் அமைந்துள்ளது. நெல்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆண்டிற்கு 30.6 மில்லியன் டன் எரிபொருள்கள் உற்பத்தி செய்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனம் நவரத்தின மதிப்பை பெற்றதாகும்.
பணியிட விவரம்
* பயிற்சியாளர்
* மொத்த காலியிடங்கள்: 500
கல்வித்தகுதி:
* இந்த பணிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ITI முடித்தவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ளவர்கள் 38 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாத சம்பளமாக ரூ. 22,000 வழங்கப்படும். இதனை தொடர்ந்து பயிற்சிக்கு பிறகு மாத சம்பளம் அதிகரித்து வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nlcindia.in என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08/07/2023.








