Gistak Media

Nobel Prize 2025 Medicine: மருத்துவ துறைக்கான நோபல் பரிசு.. 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு..!

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி மற்றும் பொருளா​தா​ரம் ஆகிய 6 துறைகளில் சிறப்​பான பங்​களிப்பை (Nobel Prize 2025 Medicine) வழங்​கிய​வர்​களுக்கு ஸ்வீடனை சேர்ந்த விஞ்​ஞானி ‘ஆல்ஃபிரட் நோபல்’ நினை​வாக நோபல் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், நேற்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது. முதல்நாளான நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 வல்லுநர்களுக்கு நோபல் பரிசு (Nobel Prize 2025 Medicine)

இந்த 2025-ம் ஆண்​டுக்​கான மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளைத் தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ.பிரன்கோவ் (Mary E.Brunkow), ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் (Fred Ramsdell) மற்றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக பகிர்ந்​தளிக்​கப்​படு​ம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Nobel Prize 2025 Medicine - Gistakmedia

இதுகுறித்து நோபல் குழு வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறிய​தாவது, அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ் மற்றும் ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர், மனித உடலின் நோயெ​திர்ப்பு மண்​டலம் பற்றி ஆய்​வில் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்களின் கண்​டு​பிடிப்​பு​கள், புற்று நோய் மற்​றும் நோய்​ எ​திர்ப்​புசக்தி மூலம் சிகிச்சை அளிக்​கும் ஆராய்ச்​சிக்கு (Nobel Prize 2025 Medicine) வழி​வகுத்​துள்​ளன. மேலும், உடலின் சக்​தி​வாய்ந்த எதிர்ப்பு சக்தி மண்​டலம், ஒழுங்​குப்​படுத்​தப்பட வேண்​டும். இல்​லை​யென்​றால், அது நமது உடல் உறுப்​பு​களையே தாக்​கும் என அவர்​கள் தெரிவித்துள்ளனர். இவர்​கள் நவீன நோய்​தடுப்​பாற்​றலை மாற்​றியமைத்​து, நோய் எதிர்ப்பு மண்​டலத்​தின் பாது​காவலர்​கள் மற்றும் ஒழுங்​கு​முறை D செல்​கள் ஆகிய​வற்றை அடை​யாளம் கண்டு புதிய ஆராய்ச்​சிக்கு அடித்​தளமிட்​டுள்​ளனர். இந்த புதிய கண்​டு​பிடிப்​பு​கள், மருத்​துவ பரிசோதனை​கள் மூலம் மதிப்​பீடு செய்​யப்​படும் சிகிச்சை முறை​யின் வளர்ச்​சிக்கு வழி​வகுத்​துள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. மேலும் நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன், ரூ.10.41 கோடி பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது.

மருத்து துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இயற்பியல் துறைக்கு அக்டோபர் 7-ம் தேதியும், வேதியியல் துறைக்கு அக்டோபர் 8-ம் தேதியும், இலக்கியத்திற்கு அக்டோபர் 9-ம் தேதியும், பெரிதும் எதிர்ப்பார்க்கபடும் அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 10-ம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அக்டோபர் 13-ம் தேதியும் அறிவிக்கப்படவுள்ளன.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top