Nobel Prize in Literature 2025: இலக்கியத்திற்கான நோபல் பரிசு..ஹங்கேரி எழுத்தாளருக்கு அறிவிப்பு..!
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக (Nobel Prize in Literature 2025) நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான விருதுகள் கடந்த அக்டோபர் 6-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளை தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக அமெரிக்காவை சேர்ந்த மேரி இ.பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு குவாண்டம் ஊடுருவல் குறித்த ஆய்வுக்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் எம்.மார்டினிஸ், பிரிட்டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்கேல் டெவோரெட் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பை கண்டுபிடித்ததற்காக ஜப்பானை சேர்ந்த க்யோடோ பல்கலைகழகத்தின் பேராசிரியர் சுசுமு கிடகவா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெல்போர்ன் (Nobel Prize in Literature 2025) பல்கலை பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலை பேராசிரியர் ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize in Literature 2025)
இதனை தொடர்ந்து தற்போது 2025 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டை சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கலைக்கு இருக்கும் சக்தியை நம்பிக்கையூட்டும் (Nobel Prize in Literature 2025) வகையில் தனது தனித்துவமான, தொலைநோக்கு பார்வை கொண்ட படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியதற்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹங்கேரியில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்தார். இவரின் படைப்புகள் அனைத்தும் தொலைநோக்கு பார்வை கொண்டவை. இவரது முதல் நாவலான ‘சாட்டன்டாங்கோ’ கடந்த 1985-ம் ஆண்டு வெளியாகி பிரபலம் அடைந்தது. இவர் எழுதிய ‘ஸ்பேட்வொர்க் பார் ஏ பேலஸ்: என்ட்ரிங் தி மேட்னஸ் ஆஃப் அதர்ஸ்’ என்ற சிறுகதையும் பிரபலம் அடைந்தது. சர்வதேச அளவில் தீவிரவாதம் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இவரது படைப்புகள் கலையின் சக்தியை ஊக்குவிக்கின்றன. இதற்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுக் குழுமம் தெரிவித்துள்ளது. அதேபோல் மிகவும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு வழங்க வேண்டும் என இஸ்ரேல், பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!