Gistak Media

Norway Chess Series 2025 : நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் குகேஷ்

நடப்பு உலக செஸ் சாம்பியன் குகேஷ், உலகின் தலைசிறந்த செஸ் வீரரும், செஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான மேக்னஸ் கார்ல்சனின் சொந்த மண்ணிலேயே நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் (Norway Chess Series 2025) வீழ்த்தி இருக்கிறார். இதுவே மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக குகேஷ் பெற்ற முதல் வெற்றி ஆகும்.

நார்வே சர்வதேச செஸ் போட்டி (Norway Chess Series 2025)

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் தொடரானது ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற மாக்னஸ் கார்ல்சன் (நார்வே) உள்பட 6 சர்வதேச வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்ற வீரர்களுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். இந்த தொடரின் முதல் சுற்றில் கார்ல்சனிடம் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ் தோல்வியடைந்திருந்தார். இதனை தொடர்ந்து 6வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனுடன் தமிழக வீரர் குகேஷ் மோதினார். தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் நார்வே வீரர் கார்ல்சனை, குகேஷ் போராடி வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 8.5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு குகேஷ் முன்னேறியுள்ளார். மேலும் முதல் 2 இடத்தில் உள்ள கார்ல்சன் மற்றும் அமெரிக்க வீரர் ஃபேபியானோ விட குகேஷ் 1 புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Norway Chess Series 2025 - Gistakmedia

வெற்றி குறித்து குகேஷ்

இந்த வெற்றி குறித்து குகேஷ் கூறியுள்ளதாவது, நான் 100 முறை விளையாடினால் அதில் 99 முறை தோற்றிருப்பேன். இது எனக்கு ஒரு அதிர்ஷ்டமான நாள் என்று அவர் கூறினார். குகேஷின் நிதானமான மற்றும் அமைதியான இந்த அணுகுமுறையானது, கார்ல்சனின் எதிர்வினைக்கு நேர்மாறாக இருந்தது. நடப்பு உலக சாம்பியனான குகேஷிடம் தோற்ற பிறகு, மேக்னஸ் கார்ல்சன் ஆடுகளத்தின் மேசையை வேகமாக அடித்துவிட்டு கோபமாக வெளியேறினார். மேலும் பேசிய அவர் நான் கார்ல்சனுக்கு எதிராக நுட்பமான முறையில் தந்திரமான நகர்வுகளை விளையாட முயற்சித்தேன் அதேசமயம், கார்ல்சனுக்கு போதிய நேரம் இல்லாததால் நெருக்கடிக்குள் சிக்கினார். இந்தத் தொடரின் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நேரம் இல்லாத நெருக்கடிகள் மிகவும் கட்டுக்கடங்காமல் போகலாம் என்பதுதான் என்று குகேஷ் கூறினார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top