Nothing Phone 3a Lite : Nothing Phone 3a Lite சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் அறிமுகம்
நத்திங் நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஹெட்செட் விற்பனை (Nothing Phone 3a Lite) மூலம் நல்ல வரவேற்பை பெற்று இந்த நத்திங் நிறுவனம் 2022-ல் ஸ்மார்ட்போன் விற்பனையை தொடங்கியது. ஏற்கனவே சர்வதேச சந்தையில் நத்திங் போன் 3 சீரிஸ் வரிசையில் போன் 3a மற்றும் போன் 3a புரோ மாடல்கள் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நத்திங் 3a Lite ஸ்மார்ட்போன் 27.11.2025 அன்று அறிமுகமாகி உள்ளது.
மீடியம் பட்ஜெட் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும்
நத்திங் நிறுவனம் மீடியம் பட்ஜெட்டில் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் விலையுயர்ந்த மாடல்களில் காணப்படும் அனைத்து அம்சங்களுடனும் மீடியம் பட்ஜெட்டில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் நிறைந்த பிரீமியம் அனுபவத்தை இந்த 3A லைட் ஸ்மார்ட்போன் அளிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
நத்திங் போன் 3a Lite-ன் முக்கிய சிறப்பு அம்சங்களின் பட்டியல் பின்வருமாறு (Nothing Phone 3a Lite)
இந்த போன் 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே (Gorilla Glass பாதுகாப்புடன்) கொண்டுள்ளது. இந்த 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளேவில் 1080 x 2392 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் சிறந்த திரை அனுபவத்தை பெற முடியும்.
இந்த ஸ்மார்ட் போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 Pro SoC) சிப்செட் வசதி உள்ளது. அதனால் இந்த சிப்செட் மூலம் மேம்பட்ட செயல்திறனை பெற முடியும். அனைத்து ஆப்களையும் இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
Nothing OS 3.5 சார்ந்த ஆணட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. (3 வருட OS அப்டேட் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் உறுதி செய்யப்பட்டுள்ளது) இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என மூன்று கேமரா இந்த ஸ்மார்ட் போனின் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது. செல்பிகளுக்கும் மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்க கேமரா 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என 2 வேரியண்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதி உள்ளது. அதாவது ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுடன் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்தலாம்
இந்த ஸ்மார்ட் போன் 5000mAh பேட்டரியுடன் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதி பெற்றுள்ளது. மேலும் இதில் 5W ரிவர்ஸ் வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதி உள்ளது. நீண்ட நேர பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங் இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பு ஆகும்.
இந்த ஸ்மார்ட் போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் (in-Display Fingerprint Sensor) வசதி உள்ளது.
Wi-Fi 6, Bluetooth 5.3 போன்ற இணைப்பு அம்சங்களும் உள்ளன. (NFC, Bluetooth 5.3, Gigabit LTE அட்வான்ஸ்ட், 5G Dual Mode, 4G LTE bands போன்ற கனெக்டிவிட்டிகளை வழங்கும்)
இந்த ஸ்மார்ட் போனின் ஹைட் 164.0 mm, விட்த் 78.0 mm, டெப்த் 8.3mm மற்றும் இதன் இடை 199 கிராம் ஆகும்.
வெள்ளை, கருப்பு மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் வெளிவருகிறது
இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.20,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 5 ஆம் தேதி முதல் விற்பனை ஆரம்பம்
இந்த போனின் முதல் விற்பனை ஆனது வரும் டிசம்பர் 5 ஆம் தேதி (05.11.2025) அன்று ஆரம்பமாகிறது. குறைந்த விலையில் மீடியம் பட்ஜெட்டில் (Nothing Phone 3a Lite) போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!