NSE Index Hit An All Time High : The NSE index ஆனது 24,650.05 Points உயர்ந்துள்ளது
NSE Index Hit An All Time High :
தேசிய பங்குசந்தையில் ஜூலை 16 அன்று வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரத்தில் Nifty-யில் வெளிநாட்டு முதலீடுகள் குவியத் தொடங்கின. இதன் காரணமாக தேசிய பங்குசந்தையின் குறியீடு ஆனது 24 ஆயிரத்து 650.05 புள்ளிகளை கடந்தது. The NSE index (National Stock Exchange index) ஆனது 63.35 புள்ளிகள் அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக 24 ஆயிரத்து 650.05 (NSE Index Hit An All Time High) புள்ளிகளைத் தாண்டியது. இதைப்போலவே மும்பை பங்குசந்தை Nifty ஆனது 185.55 புள்ளிகள் அதிகரித்து 80 ஆயிரத்து 580.41 புள்ளிகளில் வர்த்தகமாகி உள்ளது.
பங்குசந்தை நிபுணர்கள் அந்நியச் செலாவணி முதலீடு அதிகரித்ததன் காரணமாகவே இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது என காரணம் கூறுகின்றனர். கடந்த 15.07.2024 அன்று மட்டும் 2 ஆயிரத்து 684 கோடி 78 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகள் அந்நிய செலாவணியாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பங்குசந்தை வெற்றிகரமாக வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு Bharti Airtel, Tata Steel மற்றும் Infosys போன்ற நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக விலை உயர்வை பெற்றுள்ளதும் ஒரு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். Mahindra And Mahindra, Hindustan Unilever, Tata Steel, Adani Ports, ICICI Bank மற்றும் Titan ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான அளவில் விலை உயர்ந்துள்ளன.
குறிப்பாக PSUs (பொதுத்துறை நிறுவனங்கள்), Infrastructure (உட்கட்டமைப்பு), Defense Sector Companies (பாதுகாப்புத் துறை நிறுவனங்கள்), Adani மற்றும் Ambani உள்ளிட்ட மத்திய ஆட்சிக்கு நெருக்கமான கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகள் ஆனது நல்ல ஏற்றத்தைப் பதிவு செய்யும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் பருவமழை காலத்தின் முன்னேற்றம் மற்றும் ஊக்கமளிக்கும் உலகளாவிய தரவு ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளன. இன்றைய பங்குச் சந்தை ஆனது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் இருப்பதால், இன்றைய பங்கு வர்த்தகத்தில் நல்ல ஏற்றத்தைக் காண முடிகிறது. பங்குச் சந்தை உச்ச நிலையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் எதில் முதலீடு செய்வது மற்றும் எவ்வளவு காலத்துக்கு முதலீட்டைத் திட்டமிடுவது என்பது குறித்து ஆராய்ந்து பார்த்து தகுதியான பங்குகளில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!