Gistak Media – Cinema News | Trending News | Latest News

Padma Awards 2024 : மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் (Padma Awards 2024) அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மிகவும் உயரிய விருதான பத்ம விருதுகள் (Padma Awards 2024) பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு குடியரசு தினத்தையொட்டி, பத்ம விருதுகளை 25/01/2024 வியாழக்கிழமை இரவு அறிவித்தது. மத்திய அரசு 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவித்தது. தமிழகத்தைச் சோ்ந்த இருவருக்கு பத்ம விபூஷன் விருதும், ஒருவருக்கு பத்ம பூஷன் விருதும் மற்றும் 4 பேருக்கு பத்மஸ்ரீ  விருதும் என மொத்தம் 7 பேருக்கு பத்ம விருதுகள் (Padma Awards 2024) அறிவிக்கப்பட்டுள்ளன.

Padma Awards 2024 - பத்ம விபூஷன் விருது பெற்றவர்கள் :

  • முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு (74)
  • பழம் பெரும் நடிகை வைஜெயந்தி மாலா (90)
  • தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி (68)
  • சென்னையைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்பிரமணியம் (80)
  • பிகாரைச் சோ்ந்த மறைந்த சமூக ஆா்வலா் பிந்தேஸ்வா் பதக்

ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி, வைஜெயந்தி மாலா, பத்மா சுப்பிரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு பொது விவகாரங்களில் சிறப்பாக சேவைபுரிந்தற்காக இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பீகாரைச் சேர்ந்த பிந்தேஷ்வர் பகத்திற்கு (இறப்பிற்குப் பிறகு) சிறந்த சமூக சேவைக்காக பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Padma Awards 2024 - பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் :

பத்ம பூஷன் விருது 17 பேர்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது அதில்,

  • மறைந்த முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி சிறந்த சேவையாற்றிதயற்காக பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மறைந்த தேமுதிக தலைவா் மற்றும் நடிகர் விஜயகாந்த் கலைத்துறையில் சிறந்த சேவையாற்றிதயற்காக பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Padma Awards 2024 - பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் :

17 பேர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன அதில்,

  • பாடகி உஷா உதுப்
  • நடிகா் மிதுன் சக்கரவா்த்தி
  • மருத்துவத்துறையில் தமிழகத்தைச் சேர்ந்த ஜி.நாச்சியார்
  • கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நடனக் கலைஞர் பத்திரப்பன்
  • டென்னிஸ் வீரா் ரோஹன் போபண்ணா
  • விளையாட்டுத் துறையில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா
  • கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் எழுத்தாளா் ஜோ டி குரூஸ்
  • கலைத்துறையில் தமிழகத்தைச் சேர்ந்த சேஷம்பட்டி டி.சிவலிங்கம்
  • இந்தியாவின் முதல் யானை பெண் பராமரிப்பாளா் பாா்வதி பருவா
  • வன சூற்றுச்சூழல் ஆா்வலா் சாய்மி முா்மு
  • மிஸோரமின் சமூக ஆா்வலா் சங்தாங்கிமா
  • பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா் பிரேமா தன்ராஜ்
  • விவசாயத் துறையில் சிறப்பாக செயல்பட்ட தெற்கு அந்தமானில் இயற்கை விவசாயம் செய்து வரும் செல்லம்மாள்
  • 650-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளைப் பாதுகாத்து வரும் காசா்கோட்டைச் சோ்ந்த விவசாயி சத்யநாராயண பெலேரி
  • சா்வதேச மல்லா்கம்பம் பயிற்சியாளா் உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே

என 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நடனக் கலைஞர் பத்திரப்பன் இந்தக் கலையின் மூலம் சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்தி உள்ளாா் மற்றும் ஆண்களுக்கான கலையாக கருத்தப்பட்ட வள்ளி ஒயில் கும்மி நடனக் கலையை பெண்களுக்கும் கற்றுத் தந்துள்ளாா். முருகன், வள்ளி கதைகளை பாட்டு மற்றும் நடனத்தை கலந்து சிறப்பாக வெளிப்படுத்துபவர்.  

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top