பாகிஸ்தான் vs இலங்கை டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டி இலங்கையின் கண்டி நகரில் உள்ள பல்லேகலே மைதானத்தில் (Pak vs Sri) நடைபெற்றது. இந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி முதலில் விளையாடி 212 ரன்கள் எடுத்தது
இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியாக விளையாடி 100 ரன்கள் எடுத்தார். அவர் 60 பந்துகளில் 9 பவுண்டரி, மற்றும் 5 சிக்ஸர்கள் எடுத்தார். 20 ஓவர்கள் விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. ஓபனர்கள் சஹிப்சதா பர்கான் மற்றும் (Pak vs Sri) பக்கர் ஜமான் ஜோடியின் பங்களிப்பே 212 ரன்களுக்குப் பிரதான காரணம். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.
இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது (Pak vs Sri)
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய இலங்கை அணி ஆனது 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் துவக்க ஜோடியால் எதிர்பார்த்த தொடக்க ஆட்டத்தை அளிக்க முடியவில்லை. நடுப்பகுதி ஆட்டகாரர்கள் 30-40 ரன்கள் சேர்த்தாலும், அவர்களால் பெரிய கூட்டணியை உருவாக்க முடியவில்லை. ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி இலங்கைக்கு நம்பிக்கை கொடுத்த போதிலும் வெற்றிக்கு தேவையான அந்த ஆறு ரன்களை பெற்றுத்தர முடியவில்லை.
பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது
பாகிஸ்தான் அணி ஆனது இலங்கையை 5 ரன்னில் வீழ்த்தி வெற்றி பெற்ற போதும் நெட் ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கியது. நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியதால் பாகிஸ்தான் (Pak vs Sri) அணி ஆனது தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் அணி ஆனது இலங்கையை 5 ரன்னில் வீழ்த்திய வெற்றி சிறிய ஆறுதல் மட்டுமே அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு தேவைப்பட்ட இமாலய வெற்றி கிடைக்கவில்லை. இந்த சிறிய வெற்றி ஆனது போதவில்லை. பாகிஸ்தானின் சூப்பர் 8 கனவு சிதறியது. பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடித்துள்ளது.
கடைசி போட்டியின் வெற்றி சிறிய ஆறுதலை தந்துள்ளது
Super 8 வரை வந்து வெளியேறியது பாகிஸ்தானின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், கடைசி போட்டியின் வெற்றி சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது.