Paramporul Trailer: சரத்குமாரின் பரம்பொருள் ட்ரைலர் வெளியீடு...
நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் பரம்பொருள் படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் சரத்குமார். இவர் ஹீரோ- வில்லன் என அனைத்திலும் சிறப்பாக நடித்து வருகிறது. இந்த 2023-ஆம் ஆண்டு தளபதி விஜய்யுடன் வாரிசு, ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான க்ரைம் திரில்லர் படமான போர் தொழில் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் தொடர்ந்து அட்டகாசமான படங்கள் தயாராகி வருகிறது.
நடிகர் கௌதம் கார்த்திக்குடன் கிரிமினல், கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வாவுடன் நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்குமார், தற்போது தனது 150-வது படமான தி ஸ்மைல் மேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் சரத்குமார் நடிக்கும் அடுத்த பெரிய படமாக ‘பரம்பொருள்’ திரைப்படம் வெளியாக உள்ளது. நடிகர் அமிதாஷ் உடன் இணைந்து சரத்குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் காஷ்மிரா பரதேசி கதாநாயகியாக நடிக்கிறார். மனோஜ் மற்றும் கிரீஷ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை C.அரவிந்த்ராஜ் எழுதி இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அனிருத் பாடிய ‘அடியாத்தி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரைலர் (Paramporul Trailer) தற்போது வெளியாகியுள்ளது.
Paramporul Trailer :
2 நிமிடம் 28 வினாடிகள் ஓடும் இந்த ட்ரைலர் வீடியோ (Paramporul Trailer), சிலை கடத்தலை மையமாக வைத்து க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் சரத்குமார் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான போர் தொழில் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரசிகர்களை கவர்ந்த சரத்குமார், இந்த பிரம்மாண்ட படத்தில் மிரட்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!