Gistak Media – Cinema News | Trending News | Latest News

Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் திரை விமர்சனம்..!

1960-களில் இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் (Parasakthi Review) தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இதன்பின் தணிக்கை வாரியம் U/A 16+ சான்றிதழை வழங்கியதை அடுத்து பராசக்தி இன்று (10.01.2026) உலகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் திரைக்கதை விமர்சனம்

இப்படத்தின் திரைக்கதை மொழித் திணிப்புக்கு எதிரான தமிழ் மாணவர்களின் எழுச்சி மற்றும் உண்மைச் சம்பவங்களின் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை ஆகும். 1960களின் போராட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் விதத்தில் சிறப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம்  கல்லூரி மாணவர்களின் சக்தியையும் மற்றும் அரசியல் தூண்டுதல்களையும் சிறப்பாக சித்தரித்து உள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு சக்தி என்ற சாதாரண மாணவராக இருந்து புரட்சியாளராக மாறும் கதாபாத்திரத்தை திறம்பட இயக்கியுள்ளது. படத்தின் முதல் பாதி சாதாரணமாக திரைப்படம் போல உள்ளது என்றும் 2-ம் பாதி செம சூப்பராக இருப்பதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. பின்னணி இசை (BGM) இந்தப் படத்திற்கு (Parasakthi Review) ஒரு பெரிய பலத்தை அளித்துள்ளது. காட்சியமைப்புகளும் மற்றும் ஒளிப்பதிவும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை பாராட்டத்தக்க விதத்தில் உள்ளது.

சிவகார்த்திகேயன் சக்தி கதாபாத்திரத்தில் புதுமை படைத்துள்ளார்

இது சிவகார்த்திகேயனின் 25வது படம் ஆகும். சிவகார்த்திகேயன் நடிப்புக்கு தீனிப்போடும் விதத்தில் சக்தி என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரது கண் நடிப்பு மற்றும் உடல் மொழி மிகவும் பாராட்டத்திற்கு உரிய வகையில் வெளிப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் வழக்கமாக செய்யும் காமெடி ஹீரோ கதாபாத்திரங்களில் இருந்து விலகி உணர்ச்சி பூர்வமாக நடித்துள்ள படப் பட்டியலில் இப்படம் நிச்சயம் இடம் பெறும்.

'பராசக்தி'-க்கு சிறப்பு சேர்த்த பிற கதாபாத்திரங்கள் (Parasakthi Review)

ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக சரியான விதத்தில் மோதி உள்ளார். ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுகம் ஆனது சிறப்பான வரவேற்பைப் பெறும் விதத்தில் காதல் கோட்பாட்டில் உணர்ச்சி சேர்த்து அளிக்கப்பட்டுள்ளது. லீலா தனது நடிப்பை மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் மற்றும் நெகிழ்ச்சியூட்டும் விதமாகவும் வெளிப்படுத்தி உள்ளார். அதர்வா கிளைமாக்ஸ் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

Parasakthi Review - Gistakmedia

இந்தி எதிர்ப்பு கதைக்களம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துமா?

இப்படம் 1960களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் விதத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா மாணவர் சமூகத்தின் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை பற்றி சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். நிச்சயமாக பராசக்தி சக்திவாய்ந்த தாக்கத்தை மக்கள் மனதில் குறிப்பாக மாணவர் சமூகத்தினிடையே ஏற்படுத்தும்.  மொத்தத்தில் சிவகார்த்திகேயன் சக்தி கதாபாத்திரத்தில் (Parasakthi Review) புதுமை படைத்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் “பராசக்தி” ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top