சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலாஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “பராசக்தி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து (Parasakthi Trailer) வருகிறது. இந்த ட்ரெய்லர் ஜனவரி 10, 2026 அன்று வெளியாகவுள்ள ‘பராசக்தி’ படத்தின் பெரும் எதிர்பார்ப்பை மக்களிடையே உயர்த்தியுள்ளது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ உடன் வெளியீட்டு மோதலாக சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’வருகிறது.
"பராசக்தி" - 1960களின் தமிழ் சமூகத்தை பிரதிபலிக்கிறது
1960களின் தமிழ் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் “பராசக்தி” திரைப்படம் அமைந்துள்ளது. பார்வையாளர்களைத் திகைக்க வைக்கும் விதமாக 1960களின் வரலாற்று நாடகமாக உள்ளது. 1960களில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான அரசியல் கருத்தாக்கம் மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக சிவகார்த்திகேயன் போராடுவதை மையமாகக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தப்பட்ட காட்சிகள், மேலும் மிரட்டும் காட்சிகள் படத்தின் உணர்ச்சி மற்றும் வீரம் கலந்த தன்மையை வெளிப்படுத்துகின்றன. அரசியல் சார்ந்த ஆக்சன் காட்சிகள் திமுக-வின் கொள்கைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. 1960களின் ஆடைகள் மற்றும் செட் அமைப்புகள் எல்லாம் படத்தின் உண்மைத்தன்மையை மேம்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.
"பராசக்தி" கதை சுருக்கம் (Parasakthi Trailer)
1960களின் மதராஸ் மாநிலத்தில் ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை என ஆரம்பித்து நண்பர்கள் உயிரிழப்பு, குடும்ப உறுப்பினர்களின் தியாகங்கள் என தொடர்ந்து கிளைமாக்ஸில் பெரிய அளவிலான ஆக்ஷன் மோதல், தமிழ் வெற்றியுடன் முடிவடிவதை காட்டுகிறது. பெரியாரின் ஐடியாலஜி, அண்ணாவின் உரைகள், இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக மாணவர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் தீவிர போராட்டம் ஆகியவை உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் காட்டப்படுகிறது.
பராசக்தி’ திரைப்படத்தின் கதாபாத்திர படைப்புகள்
- சிவகார்த்திகேயன் – சமாதானவாதியாக தமிழ் மொழி காக்க இந்தி திணிப்புக்கு எதிராக தீவிரமாகப் போராடும் இளைஞன் சக்தியாக அவரது பொதுவான கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார் .
- ரவி மோகன் – இந்தி ஆதரவு அதிகாரியாக அனல் பறக்கும் மோதல்களை (Parasakthi Trailer) ஏற்படுத்தும் எதிரியாக மிரட்டும் உருவத்தில் தோன்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தூள் பரத்துகிறார்.
- ஸ்ரீலீலா – சக்தியின் குடும்ப உறுப்பினர், போராட்டத்தில் ஆதரவு அளிப்பவர் என கதாநாயகி மற்றும் சகோதரி உணர்ச்சிகளை திறம்பட வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் அசத்தி உள்ளார்.
- அதர்வா – சக்தியின் நண்பராகவும் மற்றும் போராட்டத் தோழமை உறுப்பினராகவும் திறம்பட வெளிபடுத்தியுள்ளார்.
- இப்படம் ஜனவரி 10, 2026 அன்று பொங்கல் வாரத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.