Gistak Media – Cinema News | Trending News | Latest News

Parasakthi : கதை திருட்டு சர்ச்சையில் ‘பராசக்தி’.. உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு

ஆகாஷ் பாஸ்கரனின் ‘டான் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் உருவான சிவகார்த்திகேயனின் திரைப்படமான ‘பராசக்தி’ வெளியீட்டிற்கு தடை கோரி எழுத்தாளர் கே.வி.ராஜேந்திரன் தொடரப்பட்ட (Parasakthi) வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எழுத்தாளர் கே.வி.ராஜேந்திரன் ₹1.01 கோடி இழப்பீடு கோரி வழக்கு

எழுத்தாளர் கே.வி.ராஜேந்திரன் தனது பதிவு செய்யப்பட்ட படைப்பான “செம்மொழி”  கதையை திருடி ‘டான் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் ஆனது “பராசக்தி” திரைப்படமாக படமாக்கி உள்ளதாகவும், அந்தப் படம் வெளியாவதை தடை செய்யவும் மற்றும் இயக்குநர்கள் பெயரை எழுத்தாளராக பயன்படுத்துவதை தடுக்கவும் ₹1.01 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் தான் செம்மொழி’ என்ற கதையை 2010-ல் பதிவு செய்திருந்ததாகவும், அந்தக் கதை 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை என்றும் கூறியுள்ளார். பதிவு செய்யப்பட்ட அந்தக் கதையை எழுத்தாளர் கே.வி.ராஜேந்திரன் பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்திருந்ததாகவும் அந்த வகையில் தான் பெற்ற கதையை தயாரிப்பாளர் சேலம் தனசேகரன் நடிகர் சூர்யாவிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். நடிகர் சூர்யா மூலம் இயக்குநர் சுதா கொங்கராவைச் சென்றடைந்ததும் அவர் நடிகர் சூர்யாவை வைத்து ‘புறநானூறு’ என்ற பெயரில் இந்தக் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார். பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும், அந்த கைவிடப்பட்ட  திட்டம் ஆனது தற்போது ‘பராசக்தி’யாக  உருவாக்கம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் (Parasakthi)

எழுத்தாளர் கே.வி.ராஜேந்திரன் தனது கதை திருடப்பட்டு ‘பராசக்தி’ எடுக்கப்பட்டுள்ளதாக 2025 ஜனவரி மாதம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்த கே.வி.ராஜேந்திரன் அந்தப் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், மேலும் செம்மொழி’  மற்றும் ‘பராசக்தி’, ஆகிய இரு கதைகளையும் ஒன்றுதானா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க சங்கத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

Parasakthi - Gistakmedia

தடை விதித்தால் மிகப் பெரிய இழப்பு ஏற்படும்

‘பராசக்தி’ படக்குழு பெரும் பொருட்செலவில்  தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, தடை விதித்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று வலுவான வாதங்களை நீதிபதி முன்வைத்தார்கள்.

படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என நீதிபதி தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவர்கள், படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது எனக் கூறி தீர்ப்பளித்தார். மேலும் ‘பராசக்தி’ படம் (Parasakthi) உருவாவது குறித்து ராஜேந்திரனுக்கு 2024 ஆம் ஆண்டே தகவல் தெரிந்திருந்தும் உரிய காலத்தில் மனு தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்துள்ளார் என்றும் போதிய ஆதாரங்கள் இல்லாத  காரணத்தாலும் ராஜேந்திரனின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top