Paris Olympics 2024 : நாளை தொடங்குகிறது பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா
ஒலிம்பிக் திருவிழாவானது பிரான்ஸின் பாரிஸ் நகரில் (Paris Olympics 2024) தொடங்க உள்ளது. இதனால் அந்த நகரமே கோலாகலமாக காணப்படுகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டு விழா, உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்.
நாளை தொடங்குகிறது ஒலிம்பிக் திருவிழா (Paris Olympics 2024) :
பிரான்சின் அழகிய நகரமான பாரிஸில் நாளை மிகப்பெரிய ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது. 2024 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து, பாரிஸ் நகரில் ஒலிம்பிக் கொண்டாட்டம் தொடங்கியது. கடந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் கிராமம் அமைக்கும் பணியில் பிரான்ஸ் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஒலிம்பிக் கிராமத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நாளை தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்கின்றன.
206 நாடுகள் பங்கேற்பு :
இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 206 நாடுகளைச் சேர்ந்த 2,900 ஆண் மற்றும் பெண் வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா (Paris Olympics 2024) பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த திறப்பு விழாவில் உலக பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை பிரமாண்டமாக தொடங்குவார்கள். ஓட்டப்பந்தயம், குத்துச்சண்டை, நீச்சல், பூப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, வாலிபால், துப்பாக்கி சுடுதல், நீளம் தாண்டுதல், கோல்ஃப், படகுப்போட்டி, பாய்மரப்படகுப் போட்டி, பளுதூக்குதல், தடை ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், பேட்மிண்டன், ரக்பி, டேக்வோண்டோ, தடை ஓட்டம், குதிரையேற்றம் மற்றும் பல போட்டிகள் நடைபெற உள்ளன. நடப்பு ஒலிம்பிக் தொடரில் முதன்முறையாக பிரேக்கிங் டான்ஸ் நிகழ்ச்சிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் ஆப்பிரிக்காவில் இருந்து 54 நாடுகள், ஐரோப்பாவில் இருந்து 48 நாடுகள், அமெரிக்காவிலிருந்து 41 நாடுகள் மற்றும் ஆசியாவில் இருந்து 44 நாடுகளும் பங்கேற்கின்றன.
களைகட்டும் பாரிஸ் :
பொதுவாக ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பதற்கு அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையே கடும் போட்டி நடைபெறும். இந்த முறையும் பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடிக்க அமெரிக்கா, சீனா இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மொத்தம் 116 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். உலகெங்கிலும் உள்ள பல தேசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதாலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் அதை காண வருவதாலும் பாரிஸ் நகரம் முழுவதும் பல மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் (Paris Olympics 2024) நாளை தொடங்கவுள்ள நிலையில் பாரிஸ் நகரம் களைகட்டி காணப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!