பிச்சிஸ் பழம் (குழிப்பேறி பழம்) கொடைக்கானல், ஊட்டி, கேரளா போன்ற மலைப்பகுதிகளில் விளையும் (Peaches Fruit Benefits In Tamil) ஒரு சத்தான பழமாகும். மேலும் பிச்சிஸ் பழம் உடல் நலத்திற்கு ஏராளாமான நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த பதிவில் பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிச்சிஸ் பழம் (Peaches Fruit Benefits In Tamil)
மலச்சிக்கலை தடுக்கும்
இந்த பிச்சிஸ் பழத்தில் ஏராளாமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த பிச்சிஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவித்து, குடல் செயல்பாட்டை சீராக்கி, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
இந்த பிச்சிஸ் பழத்தில் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (Peaches Fruit Benefits In Tamil) இருப்பதால், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய், பக்கவாதம் போன்ற அபாயங்களை தடுக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இந்த பிச்சிஸ் பழத்தில் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை எலும்பு சிதைவு போன்ற பிரச்சனைகளை தடுத்து எலும்புகள் மற்றும் பற்களை வலிமையுடன் இருக்க உதவுகின்றன.
கண் பார்வையை பாதுகாக்கும்
பிச்சிஸ் பழத்தில் கண் பார்வையை பாதுகாக்கும் வைட்டமின் A, பீட்டா-கரோட்டின் நிறைந்துள்ளது. இவை வயது முதிர்ச்சி காரணமாக ஏற்படும் கண் நோய்கள், கண்ணிழை மற்றும் மாகுலார் டெஜெனரேஷன் (Peaches Fruit Benefits In Tamil) போன்ற பிரச்சனைகளை தடுத்து கண் பார்வையை பாதுகாக்கிறது.
எடையை குறைக்கும்
பிச்சிஸ் பழத்தில் அதிக நார்ச்சத்தும், குறைந்த கலோரியும் இருப்பதால், நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவுகிறது. எனவே இது எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பழமாகும். பிச்சிஸ் பழத்தில் இனிப்பு சுவை இருப்பதால், ஜங்க் உணவுகளை தவிர்க்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இந்த பிச்சிஸ் பழத்தில் அதிக அளவு வைட்டமின் C நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் C உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி பாக்டீரியா, வைரஸ் தாக்குதல்களை தடுக்கவும், சளி, காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களை குறைத்து நோய் எதிர்ப்பு செயல்பாட்டை வலுப்படுத்த உதவுகிறது.