PGCIL (Power Grid Corporation of India Limited) என்பது இந்தியாவின் முன்னணி மின்சார பரிமாற்ற நிறுவனமாகும். இந்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தில் Diploma Trainee (Electrical/Civil/Survey), Junior Officer Trainee (HR/F&A), மற்றும் Junior Technician Trainee (Survey) பதவிகளுக்கான 660 காலியிடங்களை (PGCIL Recruitment 2026) நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள்
அறிவிக்கப்பட்டுள்ள மொத்த 660 இடங்களில், 630 இடங்கள் ஆனது POWERGRID நிறுவனத்திற்கும், மற்றும் 30 இடங்கள் CTUIL நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பதவி வாரியான காலியிட விவரங்கள்
- Diploma Trainee பதவி(Electrical/Civil/Survey) – 465 + (Electrical/Civil) மற்றும் 3 (Survey).
- Junior Officer Trainee பணி (HR/F&A) – 30 (HR) பணி மற்றும் 23 (F&A) பணி.
- Junior Technician Trainee பணி (Survey) – 23.
மண்டல வாரியான காலியிட விவரங்கள் (சில முக்கிய பகுதிகள் குறித்த விவரங்கள்)
- மேற்கு மண்டலம்-II (WR-II) – 110.
- வடக்கு மண்டலம்-I (NR-I) – 92.
- தெற்கு மண்டலம்-II (SR-II) – 81.
- தெற்கு மண்டலம்-I (SR-I) – 47.
PGCIL Recruitment 2026 : கல்வித் தகுதி தேவைகள்
● Diploma Trainee
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் சம்பந்தப்பட்ட துறையில் (Electrical/Civil/Survey) 3 ஆண்டு கால முழுநேர டிப்ளமோ படித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் பொது/OBC/EWS பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
● Junior Officer Trainee (HR)
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் BBA / BBM / BBS போன்ற இளங்கலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
● Junior Officer Trainee (F&A)
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் Inter CA / Inter CMA தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்..
● Junior Technician Trainee (Survey)
விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டு கால Regular ITI (Surveyor) தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
PGCIL Recruitment 2026 : வயது வரம்புகள் குறித்த விவரங்கள்
அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கான குறைந்தபட்ச வயதுத் தேவை 18 ஆண்டுகளாகவும் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது தளர்வுகள் குறித்த விவரங்கள்
SC/ST பிரிவினருக்கான வயது தளர்வு 5 ஆண்டுகளாகவும், OBC (NCL) பிரிவினருக்கான வயது தளர்வு 3 ஆண்டுகளாகவும், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு 10-15 ஆண்டுகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய விவரங்கள்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படும்.
● Diploma / Junior Officer Trainee
ஓராண்டு காலப் பயிற்சியின் போது ரூ. 24,000/- ஊதியம் வழங்கப்படும். ஓராண்டு காலப் பயிற்சி முடிந்து பணி (PGCIL Recruitment 2026) நிரந்தரத்தமான பின் ஆண்டு வருமானம் (CTC) சுமார் ரூ. 12.7 லட்சம் வரை இருக்கும்.
● Junior Technician Trainee
ஓராண்டு காலப் பயிற்சியின் போது ரூ. 21,000/- ஊதியம் வழங்கப்படும். ஓராண்டு காலப் பயிற்சி முடிந்து பணி நிரந்தரத்தமான பின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 10.9 லட்சம் வரை இருக்கும்.
தேர்ச்சி செய்யப்படும் முறைகள்
- அனைத்துப் பதவிகளுக்கும் கணினி வழித் தேர்வு (CBT) முதற்கட்ட தகுதித் தேர்வாக நடத்தப்படும்.
- ஜூனியர் ஆபீசர் மற்றும் டெக்னீஷியன் பதவிகளுக்கு திறன் தேர்வு / தொழில்முறைத் தேர்வு (Skill/Trade Test) தகுதித் தேர்வாக நடத்தப்படும்.
- அனைத்துப் பதவிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்
- Diploma Trainee / Junior Officer Trainee பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ. 300 செலுத்த வேண்டும்.
- Junior Technician Trainee பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ. 200 செலுத்த வேண்டும்.
- SC/ST/PwBD/Ex-SM விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
PGCIL Recruitment 2026 : விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.powergrid.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 20.04.2026 தேதி முதல் 11.05.2026 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.