Planet Parade 2024 : ஜூன் 3 ல் வானில் அணிவகுக்கும் 6 கோள்கள்
சூரியக் குடும்பத்தை சேர்ந்த 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் ஒரு அரிய நிகழ்வு வரும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் (Planet Parade 2024) நிகழவுள்ளது. சூரியக் குடும்பத்தின் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும்போது, அவற்றில் சிலவற்றை வெறுங்கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Planet Parade 2024 - ஒரே நேர்கோட்டில் வரும் 6 கோள்கள் :
பூமி உட்பட 8 கோள்களை உள்ளடக்கிய நமது சூரியக்குடும்பம், இன்னும் நாம் முழுமையாக புரிந்து கொள்ளாத இயற்கையின் வினோதமாக உள்ளது. நம்மை வியக்க வைக்கும் பல அரிய நிகழ்வுகள் உள்ளன. கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி சனி, நெப்டியூன், வியாழன், யுரேனஸ், புதன் ஆகிய கோள்கள் வானில் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இது ஒரு அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக மனித குலத்தை மேலும் ஆச்சரியப்படுத்தும் வகையில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் மிக அபூர்வ நிகழ்வு வரும் ஜூன் 3-ம் தேதி வானில் நடக்க உள்ளது. இது கோள்களின் அணிவகுப்பு (Planet Parade 2024) என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலில், “புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரப்போகிறது. இந்த நிகழ்வை நோக்கிய பயணம் ஏற்கனவே துவங்கிவிட்டதால், ஜூன் 3ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். இந்த 6 கோள்களில் புதன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். மீதமுள்ள 2 கோள்களை தொலைநோக்கியின் உதவியுடன் பார்க்க முடியும். பூங்கா மற்றும் கடற்கரை போன்ற பகுதிகளில் இருந்து இதனை பார்க்க முடியும். ஜூன் 3-ம் தேதி சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்த கண்கொள்ளா காட்சியை வானத்தில் தெளிவாக பார்க்கலாம். அதே நேரம், இது தேய்பிறை என்பதால் போதிய வெளிச்சமின்மை காரணமாகவும், வெறுங்கண்களால் கோள்களை பார்ப்பது என்பது சிரமமாக இருக்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!