இந்த ‘பி.எம். ரஹத்’ திட்டம், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து உயிர் காக்கும் நோக்கத்தில் (PM Rahat Scheme) மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும்.
‘பி.எம். ரஹத்’ திட்டம் – உயிர் காக்கும் பாதுகாப்பு திட்டம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கான உயிர்கள் விபத்துக்குப் பிறகான முதல் ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பெறாததால் பலியாகின்றன. Golden Hour எனப்படும் அந்த முதல் ஒரு மணி நேரத்தில் சிகிச்சை கிடைத்தால் பல உயிர்கள் காப்பாற்றலாம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த Golden Hour அவசர தேவைக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம் தான் PM Rahat Scheme (பி.எம். ரஹத்) திட்டம்.
பி.எம். ரஹத் திட்டம் ஒரு முதலீட்டு சேமிப்பு திட்டமல்ல
பி.எம். ரஹத் திட்டம் ஒரு முதலீட்டு சேமிப்பு திட்டம் அல்ல. அதனால் பயனாளிகள் எந்த முதலீடும் இந்த திட்டத்தில் செய்ய வேண்டியதில்லை. அரசே மோட்டார் வாகன விபத்து நிதியிலிருந்து இந்த திட்டத்திற்கு முதலீடு செய்கிறது. நீண்டகால முதலீட்டு காலம் இத்திட்டத்திற்கு இல்லை. விபத்து நிகழ்ந்து 7 நாட்களுக்குள் பயனாளிகள் தங்கள் சிகிச்சையை தொடங்கினால் மட்டுமே (PM Rahat Scheme) பயன்பெற முடியும். உறுதிப்படுத்தல் சிகிச்சைக்கு கடுமையான விபத்தில் 48 மணி நேரம், சாதாரணத்தில் 24 மணி நேரம் வரை உள்ளது.
அனைவரும் பலன் பெறும் திட்டம் (PM Rahat Scheme)
இந்த திட்டத்தின் கீழ், விபத்துக்குள்ளாகும் தகுதியுள்ள எந்தவொரு நபரும் ரொக்கமில்லா சிகிச்சை பலன்களைப் பெற உரிமை உண்டு. அதாவது வயது, சமூக நிலை, வருமானம், மதம் மற்றும் பாலினம் ஆகிய எதையும் பொருட்படுத்தாமல் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள் ஆவர். பண வசதி இல்லையே என்ற கவலை கொள்ளாமல் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அமலாக்கம் நடைபெற்று வருகிறது
பி.எம். ரஹத் (PM RAHAT) திட்டம் ஆனது மத்திய அரசின் இலவச சிகிச்சை வழங்கும் புதிய பொது சேவை திட்டமாகும். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் ரூ.1.5 லட்சம் வரை ரொக்கமில்லா இலவச சிகிச்சை அளிக்கும் (PM Rahat Scheme) திட்டமாகும். இந்த ‘பி.எம். ரஹத்’ திட்டம் ஆனது 2026 பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இந்தியா முழுவதும் அமலாக்கம் நடைபெற்று வருகிறது.
இது ஒரு தேசிய அளவிலான திட்டமாக 2026 பிப்ரவரி தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதால், தமிழ்நாட்டிலும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் அதே நேரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரங்களில் உள்ள ஆயுஷ்மான் பாரத் மருத்துவமனைகள் மூலம் உடனடியாக அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஆயுஷ்மான் பாரத் (PM-JAY) திட்டம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சை பெறலாம். இந்த மருத்துவமனைகளைத் பற்றி தெரிந்து கொள்ள pmjay.gov.in இணையதளத்தில் “Find Hospital” விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். பயனாளிகள் தங்கள் மாவட்டம்/நகரத்தைத் தேர்ந்தெடுத்து பட்டியலைப் பார்க்க வேண்டும். பயனாளிகள் 112 அவசர எண்ணை அழைத்தால் அருகிலுள்ள தகுதியான மருத்துவமனைகளின் விவரங்கள் பரிந்துரைக்கப்படும்.