உலக மக்களுக்கு உணவளித்துப் பசியை போக்கும் விவசாயிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கையின் முதன்மை வடிவாய் விளங்கும் சூரியனுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் உன்னத திருநாள் பொங்கல் பண்டிகை ஆகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் விழாவை தமிழ்நாட்டு மக்களும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணமும் (Pongal Bonus for Ration Holders) வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் ஏதாவது வழங்கப்படுமா?
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2025 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டதால், இந்த 2026ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் ஏதாவது வழங்கப்படுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தது. 2024 ஆண்டை தவிர்த்து அதற்கு முன்பாக 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் திமுக அரசு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ. 1,000 ரொக்கப் பணத்தையும் வழங்கி இருந்ததே பொதுமக்களின் இந்த சந்தேகத்திற்கு காரணம். அதிமுக ஆட்சி காலத்தில் 2021 ஆம் ஆண்டு ரூ. 2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. தற்போது மீண்டும் ரூ.3000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற தகவல் பொதுமக்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.
நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் (Pongal Bonus for Ration Holders)
பொதுமக்களுக்கு நாளை முதல் டோக்கன் வழங்கப்பட்டு ரேசன் கடைகளில் ரூ.3000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும்
பொங்கல் திருநாளை முன்னிட்டு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வேட்டி மற்றும் சேலைகள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நியாயவிலைக் கடைகள் வழியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல்
ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் வேட்டி, சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.