Gistak Media – Cinema News | Trending News | Latest News

Pongal Gift in Ration Shop 2026 : பொங்கல் பரிசுத் தொகுப்பு.. ரூ.248 கோடிக்கு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை ஆனது ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரியம் மிக்கதொரு பண்டிகை ஆகும். இந்த பண்டிகையை ஏழை எளிய மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசின் சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆனது வழக்கமாக (Pongal Gift in Ration Shop 2026) ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய அத்தியாவசியப் பொருட்களுடன் ரொக்கத் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையும் தமிழ்நாடு அரசு ஆனது வழங்கி வருகின்றது. ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு 2021 முதல் 2025 வரை

2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய அத்தியாவசியப் பொருட்களுடன் ரூ.2500 ரொக்கமாக வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட ரூ.2500 ரொக்க பணமே இதுவரை  தமிழக அரசால் கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரொக்கப் பணம் ஆகும். இதைத் தொடர்ந்து வந்த திமுக ஆட்சி காலத்தில் 2022 ஆம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்பட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பும், மற்றும் கரும்பும் வழங்கப்பட்டது. கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய திமுக ஆட்சி காலங்களில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2025 ஆம் ஆண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2025 ஆம் ஆண்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.

2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு (Pongal Gift in Ration Shop 2026)

இந்த 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு ஆனது எவ்வளவு அத்தியாவசியப் பொருட்களுடன் எவ்வளவு ரொக்கத் தொகை வழங்கும் மற்றும் எப்போது இவை வழங்கப்படும் என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இதுவரை காத்து இருந்தனர். தற்போது தமிழ்நாடு அரசு வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.248 கோடியை (Pongal Gift in Ration Shop 2026) ஒதுக்கீடு செய்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ரூ.248 கோடி நிதியைக் கொண்டு தமிழ்நாடு அரசு பச்சரிசி, சர்க்கரை, மற்றும் முழுக் கரும்புகள் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

Pongal Gift in Ration Shop 2026 - Gistakmedia

2026 ஆம் ஆண்டு கூடுதலாக ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படும்

கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரொக்கப்பணத்தைவிட இந்த 2026 ஆம் ஆண்டு கூடுதலாக ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் ஆனது நடைபெற உள்ளதை முன்னிட்டு, இதுவரை வழங்கப்படாத ரொக்கப் பணத்தை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 ரொக்கத் தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஆனது எழுந்துள்ளது. இது சம்மந்தப்பட்ட அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top