Ponniyin Selvan 2 Trailer Date: பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் தேதி அறிவிப்பு
Ponniyin Selvan 2 Trailer Date: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பக்கம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வருகின்ற 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.
கல்கியின் கைப்பட எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்” ஆகும். இதற்கு முன்னர் நடிகர் எம்ஜிஆர்,கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இந்த கதையை படமாக்க முயற்சி செய்தனர். படத்திற்கு பட்ஜெட் மற்றும் பல காரணங்களால் படம் எடுக்க முடியாமல் போனது. ஆனால் இதை கனவு படமாக இயக்குனர் மணிரத்தினம் முடித்துள்ளார்.
மிகபெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது மற்றும் குமார் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. 5 பாகங்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட ஒரு கதையை திரைப்படமாக மாற்ற முடியுமா? ஆனால் இது பெரிய சவாலாக இருந்தது. இந்த படத்தில் ராஜராஜ சோழனாக நடிகர் ஜெயம் ரவியும், கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்திருந்தனர். இவர்கள் தங்களின் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் படத்தில் உள்ள வசனங்களும், கட்சிகளும் தற்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு புரியும் வகையில் இருந்தன.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தற்போது படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அகநாக’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் ‘மார்ச் 29’ ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.








