Gistak Media – Cinema News | Trending News | Latest News

Pookie Review : Gen Z காதலை பேசுகிறதா.? ‘பூக்கி’ படத்தின் திரைவிமர்சனம்!

இன்றையகால இளைஞர்களின் காதல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு படமாக பூக்கி (Pookie Review) படம் அமைந்துள்ளது. இப்படம் 2026 பிப்ரவரி 13 அன்று வெளியாகி  உள்ளது.

'பூக்கி' படக் குழு

கணேஷ் சந்திரா இப்படத்தை  இயக்கி ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் அஜய் திஷன், ஆர்.கே. தனுஷா ஆகியோர் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்துள்ளனர். விவேக் பிரசன்னா,  ஆதித்யா கதிர், சுனில், ஷியரா, பாண்டியராஜன், பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜே. ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷர்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புதிய பரிதி இப்படத்தின்(Pookie Review )கதை, மற்றும் வசனம் எழுதியுள்ளார். 

விஜய் ஆண்டனி இசை மற்றும் எடிட்டிங் பணி

படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. அவை படத்தின் ஜாலி போர்ஷனுக்கு உதவியாக உள்ளது.  விஜய் ஆண்டனி BGMம் போர்ஷனும் செய்துள்ளார். ஆனால் உணர்ச்சிமயமான காட்சிகளில்  விஜய் ஆண்டனி இசை பலவீனமாக உள்ளது.

Notification-களின் நடுவே நிஜ நெருக்கத்தைத் தேடும் தலைமுறை

காதலர்கள் இருவரும் ஒரே நகரத்தில் வாழ்ந்தாலும், ஸ்மார்ட்போன் திரைகள், கம்ப்யூட்டர் திரைகளில் ஒரு meme page வழியே தொடங்கி Direct Message உரையாடல்களில் ஆழமடையும் காதலின் அந்த மாற்றத்தைச் சினிமா மொழியாக்கம் செய்ய முயலும் படம் தான் ‘பூக்கி’ (Pookie Review )ஆகும்.

Comment section-ல் தொடங்கும் காதல்

இப்படத்தின் நாயகன் த்விக் ஒரு UI/UX டிசைனர். இப்படத்தின் நாயகி மித்ரா ஒரு Social media content creator. இவர்கள் இருவரும் Comment section-ல் ஒரு Meme-க்கு reply பண்ணும்போது நட்பு மலர்கிறது. அதன் பின் Reply-க்கு DM,
 DM-க்கு voice note மற்றும் Voice note-க்கு confession ஆக தொடர்ந்து  காதலாகிறது. Reply delay-கள் எல்லாம் relationship status-ஆ மாறி “Last seen” emotional trigger ஆக முடிகிறது. இது ஒரு காதலின் முடிவு என்று சொல்ல முடியாத ஒரு digital chapter-ன் முடிவு ஆகும்.  Relationship status update-கள் எல்லாம்  Self-worth update-களாகி மாறிவிடுகின்றன.

காதலின் உண்மை உணர்வு வெல்லும்

இப்படத்தின் நாயகன் அஜய் தீஷன் மற்றும் நாயகி தனுஷாவின்  6 வருட காதல் ஒரு ஈகோ மோதலால் பிரேக்கப் ஆகின்றது. எல்லாவற்றுக்கும் logic தேடும் நாயகன் அஜய் தீஷன் காதலை algorithm போல அணுகுகிறார். Camera முன்னால் confident ஆக இருக்கும் நாயகி தனுஷா தனது validation-ஐ இழக்க விரும்பவில்லை. அதனால் அவர்கள் உறவு ஒரு tug-of-war ஆகிறது.  நாயகன்  ஜிம், நண்பர்கள், மற்றும் பெங்களூர் பெண் (ஷியரா) உறவில் சிக்குகிறான். நாயகி ஆன்மிகம், மற்றும் ஷாப்பிங் தேடி மறக்க முயல்கிறாள். நாயகன் மற்றும் நாயகி பழைய காதலை மறக்க முடியாமல் தவிக்கின்றனர். இறுதியில் இவர்களின் உண்மை காதல் உணர்வு வெல்கிறது.

Pookie Review - Gistak Media

விமர்சகர்களின் கூற்றுகள்(Pookie Review )

Digital grammar-ஐ Cinematic grammar-ஆ மாற்ற முயற்சி செய்யும் இயக்குநரின் சில முயற்சிகள் bold-ஆக உள்ளது. Notification-களின் நடுவே நிஜ நெருக்கத்தைத் தேடும் தலைமுறையின் அதிகாரம் மற்றும் மனித அன்பு மோதும் ஒரு உணர்ச்சி நிரம்பிய கதையை சொல்லியுள்ளார். இது காதலை கொண்டாடும் படம் அல்ல காதல் எப்படி confuse ஆகிறது என்பதைக் காட்டும் படம் ஆகும். இன்றைய இளைஞர்களின் நவீன உறவுகளின் முரண்பாடுகளை இயக்குநர் இப்படத்தில் நுணுக்கமாக பதிவு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமான “பூக்கி” என்ற சொல்லின் இனிமை, அதை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தின்(Pookie Review) கதை மற்றும் திரைக்கதையில் முற்றிலுமாக பிரதிபலிக்கவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top