Pope Francis Passed Away : போப் பிரான்சிஸ் காலமானார் சோகத்தில் கத்தோலிக்க திருச்சபை
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் (Pope Francis Passed Away) இன்று காலமானார்.
போப் பிரான்சிஸ் காலமானார் (Pope Francis Passed Away)
வாட்டிகன் வெளியிட்ட அறிக்கையின்படி, 88 வயதான போப் பிரான்சிஸ் வாட்டிகனில் உள்ள தனது வீட்டில் வயது முதுமை காரணமாக இன்று காலை (Pope Francis Passed Away) காலமானார். தென் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் என்ற பெருமை இவரையே சேரும். உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட காலமாக மருத்துவமனையில் இருந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். அவரது மரணம் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 தேதி போப் ஆண்டவராக பதவியேற்ற பிரான்சிஸ், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.
சோகத்தில் கத்தோலிக்க திருச்சபை
போப் பிரான்சிஸ் இளமையாக இருந்தபோது அவரது நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் மருத்துவர்கள் அவரது பெருங்குடலின் 13 அங்குலத்தை அகற்றினர். 2023 ஆம் ஆண்டு அவரது வயிற்றுச் சுவரில் குடலியக்கத்தை சரிசெய்து குடல் வடு திசுக்களை அகற்றினர். நுரையீரல் தொற்று காரணமாக அவர் சமீபத்தில் நீண்டகால மருத்துவ கண்காணிப்பில் (Pope Francis Passed Away) இருந்தார். போப் பிரான்சிஸ் மறைவு உலகம் முழுவதும் உள்ள 1.375 சதவீத கத்தோலிக்க மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அமெரிக்காவில் சுமார் 52 மில்லியன் பேர் அடங்குவர்.
போப் பிரான்சிஸ் வாழ்க்கை வரலாறு
1936 ஆம் ஆண்டு ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற பெயரில் பிறந்த பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஐரோப்பாவிற்கு வெளியே பிறந்து வளர்ந்த முதல் போப் ஆவார். 1958-ம் ஆண்டில் அவர் ஜேசுயிட்ஸில் சேர்ந்து தேவாலயத்தின் தரவரிசையில் உயர்ந்து 1998-ல் புவெனஸ் அயர்ஸின் பேராயரானார். 2001 ஆம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால் (Pope Francis Passed Away) அவரை ஒரு கார்டினலாக ஆக்கினார். 2013-ல் போப் பெனடிக்ட் ராஜினாமா செய்வதற்கு முன்னதாக வாட்டிகனுக்கு பிரான்சிஸ் வந்தது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
முந்தைய போப்களைப் போலல்லாமல், பிரான்சிஸ் ஒரு தாராளவாதியாகச் செயல்பட்டார். அதன்படி LGBTQ+ சமூகத்தை ஆதரித்ததற்காக தேவாலயத்தில் அவர் சர்ச்சையை எதிர்கொண்டார். வாட்டிகன் அலுவலகத்திற்குத் தலைமை தாங்க முதல் பெண்ணை அவர் நியமித்தார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்குச் செல்லும் குடியேறிகளுக்கு எதிரான இனவெறி எதிர்வினைகளுக்கு எதிராக அவர் பேசினார். டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்கு முன்பு குடியேறிகளை (Pope Francis Passed Away) பெருமளவில் நாடுகடத்தும் டிரம்பின் திட்டங்களை ஒரு “அவமானம்” என்று அவர் கடுமையாக சாடினார். கருக்கலைப்புக்கு எதிரான தனது எதிர்ப்பில் போப் உறுதியாக இருந்தார், அதை “முழுமையான தீமை” என்று அழைத்தார். போர்கள் முடிவுக்கு வர வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Latest Slideshows
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!
-
T20 World Cup Semi Final : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா.. இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்.!
-
SA vs NZ t20 : ஆலன் அதிரடி சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.!
-
India vs England T20 : டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.!
-
Artemis II : 50 ஆண்டுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு பயணம்.. நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம் தயார்!
-
Central Bank of India Recruitment : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 275 அதிகாரி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
SA vs NZ Semi Final : டி20 உலகக் கோப்பை.. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை!
-
IND vs AFG Schedule : இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு.!
-
KITE-QTrack App : வினாத்தாள்–விடைத்தாள் லைவ் டிராக்.. புதிய ஆப் அறிமுகப்படுத்திய கேரள அரசு.!