மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்திய அஞ்சல் துறை (India Post), இந்த ஆண்டுக்கான 28,740 காலிப் பணியிடங்களை (Postal Department Jobs 2026) நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் 2009 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே அடிப்படை தகுதி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடு முழுவதும் உள்ள அரசு வேலை கனவு காணும் இளைஞர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.
சம்பள விவரம்
மாதம் – Rs.10,000 – Rs.14,500 இது பணிநேரம் மற்றும் பதவியைப் பொறுத்து மாறுபடும்.
கல்வித் தகுதி (Postal Department Jobs 2026)
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் SSLC/Matriculation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு பெற்றவர்களாக (Postal Department Jobs 2026) இருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்புகள்
- குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள்,
- அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள்.
வயது தளர்வுகள்
- SC/ST பிரிவினர் – 5 ஆண்டுகள்
- OBC பிரிவினர் – 3 ஆண்டுகள்
தேர்வு முறை
10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் (Merit List) தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக முன்னுரிமையானது வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் indiapostgdsonline.gov.in இல் பதிவு செய்து, ரூ.100 கட்டணம் (பொதுப் பிரிவுக்கு) செலுத்தி, ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆனது ஜனவரி 31, 2026 அன்று தொடங்கும். இது பிப்ரவரி 14, 2026 வரை தொடரும்.
தேர்வு செய்யப்பட்ட மெரிட் லிஸ்ட் வெளியீடு
தேர்வு செய்யப்பட்ட முதல் மெரிட் லிஸ்ட் பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று வெளியாகும்.