Prabhas in Salaar Teaser: KGF படத்துக்கு டஃப் கொடுக்க வரும் சலார்
நடிகர் பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான பிரபாஸ், பாகுபலி படத்திற்கு அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஒரு நல்ல சோதனையாக மாறினார். இப்படத்தை தொடர்ந்து ராதே ஷ்யாம் சாஹோ மற்றும் தற்போது வெளியான ஆதிபுருஷ் ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன.இதனால் மீண்டும் எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் பிரபாஸ் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சலார்
இந்த வகையில் KGF படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சலார் படத்தை ஹம்பாளே பிலிம்ஸ் சார்பில் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இந்த படத்தை தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா என்ற பெயரில் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தை ஏற்படுத்திய நேரம்
இந்த படம் KGF படத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதற்குக் காரணம், படத்தின் டீசர் ஜூலை 6-ஆம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. சம்பந்தமே இல்லாமல் டீசர் ஏன் அதிகாலையில் வெளியாகிறது என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். ஆனால் சிலர் KGF படத்தின் 2 ஆம் பாகத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ யஷ் கப்பலை இயக்கிக் கொண்டிருப்பர். அப்போது அருகில் உள்ள கடிகாரத்தில் 5 மணி என இருக்கும். இதனால் KGF படத்திற்கும் ‘சலார்’ படத்திற்கும் தொடர்பு இருப்பதாக ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
Prabhas in Salaar Teaser வெளியீடு
இந்நிலையில் ‘சலார்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிரும். டீசரில் வரும் காட்சிகள் KGF படத்தை நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் நள்ளிரவிலிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கியதால், பலரும் KGF படத்துடன் டீகோட் செய்து வருகின்றனர். இந்த படம் பிரபாஸுக்கு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.








