-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
பல முகங்களை கொண்ட Prakash Raj Birthday On March 26
பிரகாஷ்ராஜ் (Prakash Raj) என்பவர் இந்திய திரைப்படத்தில் புகழ்பெற்ற ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் இப்படி பன்முகங்களை கொண்டவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். டூயட் என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகி தனது திரை பயணத்தை தொடங்கினார். தற்போது வரையிலும் சிறந்த நடிகராக நடித்து பல விருதுகளை பெற்று வருகிறார்.
பிறப்பு மற்றும் இளமை பருவம் :
திரு. பிரகாஷ்ராஜ் (Prakash Raj) அவர்கள் 1965 மார்ச் 26 பெங்களூரில் பிறந்தார். தற்போது அவருக்கு 57 வயது ஆகிறது. இவரது இயற்பெயர் பிரகாஷ் ராய், இவரது தம்பி பெயர் பிரசாந் ராய் இவரும் ஒரு நடிகர். பிரகாஷ்ராஜ் (Prakash Raj) அவர்களின் பள்ளி படிப்பெல்லாம் செயின் ஜோசப் இந்தியன் ஹை ஸ்கூல் படித்துள்ளார். அதை தொடர்ந்து காமஸ் டிகிரியை செயின் ஜோசப் காலேஜ் ஆஃப் காமஸில் படிக்கிறார்.
நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால் இவர் தனது படிப்பை பாதியிலேயே விட்டு ஒரு நாடக குழுவில் இணைந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார். அங்கு அப்படியே நடிப்பைக் கற்றுக்கொண்டு, வசன உச்சரிப்புகள், முக பாவனைகள், நவரசங்களையும் கற்றுக்கொள்கிறார். பெங்களூர் கலாஷேத்திராவில் பணியாற்றினார் அப்போது அவருக்கு கிடைத்த மாத சம்பளம் 300 ரூபாய். இதுவரையிலும் 2000 மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நாடக கலைஞர்களை ஒத்திகை பார்த்து அவர்களின் நடிப்பு பிடித்திருந்தில் தங்களின் படங்களில் நடிக்க அழைப்பார்கள்.
அப்படி ஒரு முறை நாடக இயக்குனர் பிரகாஷ் ராஜ் அவர்களை திரைப்பட இயக்குனருக்கு அறிமுகம் செய்து வைக்க பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு சினிமா வாய்ப்பும் வருகிறது ஆனால் அவர் அந்த வாய்ப்பை மறுத்து விடுகிறார். ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை விட நாடகங்களை தான் மக்கள் அதிகம் விரும்புவார்கள் இவருக்கென்றே ஒரு ரசிகர் கூட்டமும் இருந்தது அது மட்டும் இன்றி நாடகத்தில் இவருக்கென முக்கிய கதாபாத்திரம் வழங்கப்படும் ஆனால் திரைப்படத்திற்கு சென்றால் அதுபோன்று இருக்காது என்றெல்லாம் நினைத்து இந்த காரணங்களால் படவாய்ப்பை மறுத்துவிட்டார் பிரகாஷ்ராஜ் அவர்கள்.
திரைப்பட வாய்ப்புகளும், திரைப்படங்களும்:
பிரகாஷ் ராஜ் (Prakash Raj) அவர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனரான கே.எஸ்.எல் சாமி அவர்கள் ஒரு படத்தில் டாக்டர் ரோல் இருக்கு அதுல நடிக்கனும் அப்படினு சொல்றாரு, அவர் மேல இருக்க மரியாதையின் நிமிர்தமா அதை மறுக்காமல் ஒப்புக்கொண்டு நடித்தார். அதன் பிறகு கன்னட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் பணத்தேவைக்காக நடிக்கிறார். மற்ற சமயத்தில் திரைப்பட வாய்ப்பை மறுத்து விடுகிறார்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சில் நாடக வாய்ப்பு கிடைத்து அதில் நடிக்கிறார். இதை தொடர்ந்து நடிகை கீதா நடித்த கன்னட படமான மிதிலேயே சீதாரயா என்னும் படத்தில் மருத்துவராக நடிக்கிறார். அவருடை நடிப்புத்திறமையையும், வசனஉச்சரிப்பையும் பார்த்த நடிகை கீதா தமிழ் திரைப்பட இயக்குனரான திரு. கே. பாலச்சந்தருக்கு பிரகாஷ்ராஜை அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த சமயத்தில் திரு. பாலச்சந்தர் அவர்கள் டூயட் படம் எடுப்பதற்காக ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தார். அதனால் பிரகாஷ்ராஜ் (Prakash Raj) அவருக்கு நடிப்பு ஒத்திகை வைத்து நடித்து காட்டும்படி சொல்கிறார் பிரகாஷ்ராஜும் நடித்து காட்டுகிறார்.
பிரகாஷ்ராஜின் நடிப்பு பிடிக்கிறது. தமிழ் மொழி தெரியாத பிரகாஷ்ராஜிடம் படம் ஆரம்பிக்கும் முன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் கற்றால் தான் படவாய்ப்பு கிடைக்கும் என்றும் சொல்கிறார். மேலும் பிரகாஷ் ராய் என்பதை பிரகாஷ் ராஜ் என்று மாற்றிக்கொள்ள அதுதான் தமிழ் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் சொல்கிறார்.
இதனை ஒப்புக்கொண்டு சீக்கிரமே தமிழ் மொழியை கற்று டூயட் படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார் பிரகாஷ்ராஜ் (Prakash Raj). இந்த படப்பிடிப்பு சமயத்தில்தான் பாலச்சந்தரின் ஒர்கிங் ஸ்டைல் மற்றும் ஒர்கிங் டெடிகேஷன் பார்த்து பிரகாஷ்ராஜ் (Prakash Raj) பிரமித்து போக இதிலிருந்துதான் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்படுகிறது. 1994-ல் இந்த படம் வெளியாகிறது. ஆனால் மக்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் இந்த படத்தை தொடர்ந்து நிலா, பாம்பே, பிள்ளைகுட்டிகாரன், ஆசை, சீதனம், கல்கி, பிரியம், சுபாஷ் என்று வரிசையா தமிழ் திரைப்படங்களில் நடிக்கிறார்.
இதில் ஆசை படத்தில் தனது மனைவியின் தங்கையை அடைய தனது மனைவியையே கொலை செய்கிறார். அந்த அளவிற்கு கொடூரமான கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருப்பார். இந்த படத்தின் இயக்குனரான வசந்த்திடம், கே.பாலச்சந்தர்தான் பரிந்துரைக்கிறார். 1995 – ல் இந்த படம் வெளியாகிறது.
1996 – ல் கல்கி வெளியிடப்படுகிறது. இதிலும் வில்லனாகவே நடிக்கிறார். இந்த படமும் சிறந்த வில்லன் நடிகர் என்ற பெயரை வாங்கித்தருகிறது. இதை தொடர்ந்து A.M ரத்தினம் அவருக்கு இவருடைய தமிழ் படம் பிடித்துப்போக தெலுங்கிலும் சங்கல்பம் என்கிற ஜெகபதி பாபுவின் படத்தில் கௌதமியுடன் நடிக்கிறார். அந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். அந்த படம் ஃபிளாப் ஆனாலும் அவர் நடித்த கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து தெலுங்கிலும் நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பிக்கிறது. தெலுங்கு மொழியையையும் கற்றுக்கொண்டு இவரே தனது நடிப்பிற்கு வசனம் (டப்பிங்) பேசுகிறார்.
தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடிக்கிறார். அந்த சமயத்தில் பாஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் மோகன்லாலை வைத்து ஒரு படம் எடுக்கிறார். தி பிரின்ஸ் என்னும் படம் அந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் (Prakash Raj) மலையாள படத்தில் அறிமுகமாகிறார். இதனை தொடர்ந்து மம்முட்டியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து மலையாளத்திலும் நடிக்கிறார்.
விருதுகள்:
தெலுங்கில் படத்தில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் கன்ஷார்ட் படம் இதில் பிரகாஷ்ராஜின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் பயமுறுத்தும் அளவில் வில்லத்தனமாக இருந்தது என்று பாராட்டைப் பெற்றார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் தொடர்ந்து தன் திறமையை வெளிப்டுத்தினார்.
பிரகாஷ்ராஜின் நடிப்பு திறமையை அறிந்த இயக்குனர் மணிரத்தினம் அவருடை திரைப்பட வாழ்விலே முக்கியமாக அமைந்த திரு.எம்.ஜி.ஆர், திரு.கலைஞர் அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாறான இருவர் என்னும் படத்தில் வாய்ப்பு தருகிறார். இந்த வாய்ப்பை சரியாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்(Prakash Raj).
1997-ல் வெளியாகிய இந்த படம் அந்த வருடத்திற்கான (Best Supporting Actor) என்னும் தேசிய விருதை வாங்குகிறார். அதுமட்டுமின்றி பவன்கல்யாண், சிரஞ்சீவி என்னும் எல்லா பெரிய நடிகர்களுடன் நடித்து தெலுங்கில் தி மோஸ்ட் வான்டட் வில்லன் ஆகிறார். இதை தொடர்ந்து பிரகாஷ்ராஜ் (Prakash Raj) அவர்கள் தமிழில் அப்பு படத்திலும், வானவில் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். வானவில் படத்திற்காக பெஸ்ட் வில்லன் என்னும் விருதை வாங்குகிறார். பின் தயா படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
2003 ல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காக (Best Supporting Actor) சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெறுகிறார். 2004 ல் கில்லி, சிவகாசி படத்திற்கு சிறந்த வில்லன் என்னும் விருதை பெறுகிறார். 2008 ல் காஞ்சிவரம் படத்திற்காக சிறந்த நடிகர் என்னும் விருதை பெறுகிறார். 2012 ல் சிங்கம் படத்திற்காக சிறந்த வில்லன் விருதை பெறுகிறார். பிலிம் ஃபேர், நேஷ்னல் மற்றும் இண்டெர்நேஷ்னல் விருதுகளை தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் தன் நடிப்பு திறமையால் பல விருதுகளை பெற்றுள்ளார்.
பிரகாஷ்ராஜ் நடித்த கதாபத்திரங்கள்:
பிரகாஷ்ராஜ் (Prakash Raj) அவர்கள் 2008 ல் மட்டும் கிட்டத்தட்ட தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 15 படங்களில் நடித்துள்ளார்.
கில்லி (முத்துப்பாண்டி), சிவகாசி(உடையப்பா), அந்நியன்(DSP பிராபர்க்), ஐயா(கருப்புசாமி), போக்கிரி(அலி பாய்), சிங்கம்(மயில் வாகனம்) போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் (Negative Role) லில் மிரட்டும் அளவில் நடித்திருந்தாலும். அபியும் நானும், சந்தோஷ்சுப்ரமணியம், M.குமரன் S/o மகாலஷ்மி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் அதற்கு அப்படியே எதிர்மறையாகவும் (Positive Role) களில் பாசம் மிகுந்த தந்தையாக நடித்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
எந்த மொழியாக இருந்தாலும் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை சிறந்த முறையில் இன்றுவரையிலும் இயல்பான நடிப்பால் நிறைய ரசிகர்களை கொண்டுள்ளார்.
இயக்குனர் & தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ்:
பிரகாஷ்ராஜ் (Prakash Raj) அவர்கள் நடிப்பு மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களையும் இயக்கியுள்ளார். தோனி என்னும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியுள்ளார். உளவச்சாரு பிரியாணி தெலுங்கிலும், உன் சமையல் அறையில் தமிழிலும் இயக்கியுள்ளார்.
பிரகாஷ்ராஜ் (Prakash Raj) அவர்கள் தயாரிப்பாளராகவும் திரையுலகில் செயல்படுகிறார். அவர் முதலில் நடித்த தமிழ் படத்தின் பெயரையே தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு (Duet Production ) என்னும் பெயரில் வைத்துள்ளார். தயா படத்தில் தொடங்கி, அழகிய தீயே, கண்ட நாள் முதல், மொழி, வெள்ளித்திரை இறுதியாக இனிது இனிது படம் வரை தயாரித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை:
திரையுலகில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த பிரகாஷ்ராஜ் (Prakash Raj) அன்றைய காலகட்டத்தில் அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், செப்டம்பர்-5-2017 ல் அவரது நெருங்கிய தோழி பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ் என்பவர் பெங்களூரின் படுகொலை செய்யப்படுகிறார். இதனால் வருத்தமடையும் பிரகாஷ்ராஜ் அதை பற்றி யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காத நிலையில் கோபம் அடைந்து இவர் தனது கருத்தை முன்வைக்கிறார்.
இதை தொடர்ந்து அரசியலில் 2019 ல் பெங்களூரில் சுயேட்சையாக போட்டியிட்டு தோற்கிறார் இருப்பினும் 28,906 வாக்குகளை பெற்றிருக்கிறார். இது மட்டுமின்றி பெங்களூரில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராம வளர்ச்சிக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.
1965 ல் பிறந்து, 2000 களில் மேடை நாடகங்களில் நடித்து, 1994 ல் திரையுலகில் கால் பதித்து இன்றுவரையிலும் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். அரசியலிலும் தனது கருத்துக்களையும், செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி வருகிறார்.








