Premalu 2 Update : விரைவில் உருவாகும் பிரேமலு 2
மலையாளப் படத்தின் டப்பிங் பதிப்பாக வெளியான ‘பிரேமலு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் (Premalu 2 Update) வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரேமலு :
மலையாளத் திரையுலகம் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்தே ஒட்டுமொத்த திரைப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை வழங்குவதில் தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் மலையாளத் திரையுலகம்தான் எப்போதும் முதலிடத்தில் உள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம் போன்ற தரமான படைப்புகளின் வரிசையில் ஃப்ரீ ஸ்டைல் ரொமான்டிக் ஜானரில் முழுநீள பொழுதுபோக்குப் படமாக வெளிவந்தது தான் ‘பிரேமலு’ திரைப்படம்.
கிரிஷ் ஏடி இயக்கத்தில் நஸ்லன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் செம்ம ரகளையான யூத் ஃபுல் திரைப்படமாகும். மனதைக் கவரும் கதைக்களம் கொண்ட காதல் நகைச்சுவை படமாகும். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. கேரளா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான வெர்ஷனையும் ரசிகர்கள் கொண்டாடினர். ரூ.3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. திரையரங்குகளுக்குப் பிறகு டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘பிரேமலு’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Premalu 2 Update :
முதல் பார்வையில் காதல் வயப்படும் ஹீரோ, பொருளாதார நிலை கண்டு தாழ்வு மனப்பான்மை, காதலுக்காக நண்பனை துன்புறுத்துதல் என வழக்கமான காதல் கதை என்றாலும், கவனத்தை ஈர்க்கும் டயலாக்குகளாலும், புதுமையான உடல்மொழி என கவனத்தை ஈர்த்த ஹீரோ. படத்தின் ஆரம்பம் முதலே, நாயகி மமிதா பைஜூ, தனது துறுதுறுப்பான பேச்சாலும், சின்ன சின்ன நகைச்சுவைகளாலும் நம்மை அழகாக ரசிக்க வைத்தார். கிளைமாக்ஸ் காட்சியில் லண்டனுக்கு செல்ல விசா கிடைக்கவும், ஹீரோ ஹீரோயினிடம் இருந்து பிரிந்து செல்வது போல் கதை முடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ‘பிரேமலு 2’ படத்தின் அப்டேட்டை (Premalu 2 Update) படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் திரையுலக ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதன்படி ‘பிரேமலு’ படத்தின் இரண்டாம் பாகம் 2025ல் வெளியாகும் (Premalu 2 Update) என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Latest Slideshows
-
TNPSC Group 2 & 2A Exam Postponed : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி.. தமிழகம் முழுவதும் தேர்வுகள் தள்ளிவைப்பு.!
-
India Beat USA T20 WC : டி20 உலககோப்பை.. அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றிகரமான தொடக்கம்..!
-
With Love Review : பழைய காதலைத் தேடும் பயணமா? 'வித் லவ்' திரை விமர்சனம்.!
-
India U19 Champions 2026 : யு19 உலகக்கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தி 6வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
India T20 World Cup Fixtures : டி20 உலகக் கோப்பை.. இந்திய அணி ஆடும் போட்டிகளின் முழு அட்டவணை விவரம்?
-
WPL 2026 Final : மகளிர் ஐபிஎல்.. டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது ஆர்சிபி..!
-
Murugappa Group : 125 ஆண்டுகள் வரலாறு கொண்ட "முருகப்பா குழுமத்தின்" வெற்றிப் பயணம்.!
-
Postal Department Jobs 2026 : அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! உடனே விண்ணப்பிங்க.!
-
India U19 WC Final : U19 உலகக்கோப்பை.. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி FINAL சென்றது இந்தியா.!
-
Hair Thin Fiber Chip : மனித முடியை விட மெல்லிய 'கணினி சிப்'.. சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!