Gistak Media

Punjab Sind Bank Recruitment 2026 : டிகிரி படித்தவர்கள் உடனே Apply பண்ணுங்க!

டெல்லியை  தலைமையகமாக கொண்டு 1908 ஆம் ஆண்டு முதல் செயல் பட்டு வரும் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி (Punjab & Sind Bank) ஆனது இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கியில் தற்போது மொத்தமாக 1,000 உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer – LBO) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு (Punjab Sind Bank Recruitment 2026) அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு குறித்த விரிவான தகவல்கள்

இந்திய நாடு முழுவதும் உள்ள 17 மாநிலங்களில் உள்ள கிளைகளில் மொத்தமாக 1,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முக்கியமான மாநிலங்களில் உள்ள காலிப்பணியிட விவரங்கள்

  • தமிழ்நாட்டில் 65 பணியிடங்கள்
  • உத்தரப் பிரதேசத்தில் 200 பணியிடங்கள்
  • குஜராத்தில் 125 பணியிடங்கள்
  • பஞ்சாப்பில் 100 பணியிடங்கள்
  • ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் தலா 80 பணியிடங்கள்
  • மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 60 பணியிடங்கள்
  •  ஜார்க்கண்ட் மற்றும் கேரளாவில்  தலா 10 பணியிடங்கள்
Punjab Sind Bank Recruitment 2026 - GISTAK media

உள்ளூர் வங்கி அதிகாரி பணிக்கான கல்வி, தகுதி வரம்புகள்

Punjab Sind Bank Recruitment 2026 : தேவையான கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Degree) பெற்றவராக இருக்க வேண்டும்.

தேவையான பணி அனுபவம்

 விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு வணிக வங்கி (Scheduled Commercial Bank) அல்லது மண்டல கிராமப்புற வங்கியில் குறைந்தபட்சம் 18 மாதங்கள் (RRB) அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேவையான மொழித் தகுதி

விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில்  நன்றாக எழுத, படிக்க மற்றும் பேசும் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில்  நன்றாக எழுத, படிக்க மற்றும் பேசும் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள்

(Punjab Sind Bank Recruitment 2026) விண்ணப்பதாரர்கள் 01.03.2026 தேதியின்படி 20 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

வயதுத் தளர்வு விவரங்கள்

அரசு விதிமுறைகளின்படி, எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளன. 

ஊதிய விவரங்கள்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை ஊதியம் ஆனது வழங்கப்படும். இதனுடன் கூடுதல் பலன்களாக அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), மருத்துவ உதவி மற்றும் பயணச் சலுகைகள் போன்றவை  வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

  • தேர்வு செய்யப்படும் முறையானது  4 நிலைகளைக் கொண்டுள்ளது.
  •  ஆங்கில மொழி, வங்கி அறிவு, பொது அறிவு/பொருளாதாரம் மற்றும் கணினித் திறன் ஆகியவற்றுக்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
  •  ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள்.
  •  அதன்பிறகு  டெல்லியில் 30% மதிப்பெண் நேர்காணல் (Interview).
  •  உள்ளூர் மொழித் திறனுக்கான தகுதித் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • பொது (General), OBC மற்றும் EWS பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 + வரிகள் செலுத்த வேண்டும்.
  • SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwBD) விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 + வரிகள் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியின் (Punjab & Sind Bank) அதிகாரப்பூர்வ இணையதளமான https://punjabandsind.bank.in/ என்ற பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  •  விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 20, 2026  வரை  விண்ணப்பிக்கலாம்

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top