பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராவ் ரமேஷ், ராஷ்மிகா மந்தனா, ஜகபதி பாபு, அனுசுயா உள்ளிட்ட பலர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. புஷ்பா 1 திரைப்படம் அல்லு அர்ஜுனுக்கு 2021-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புஷ்பா 2 படத்தின் (Pushpa 2 Movie Review) திரை விமர்சனத்தை பார்க்கலாம்.
புஷ்பா 2 கதை
புஷ்பா 2 படத்தில் தன்னுடைய மனைவி ஸ்ரீவள்ளி முதலமைச்சருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்க கள்ளக்கடத்தல் செய்றவங்க கூடலாம் போட்டோ எடுக்க முடியாது என படத்தில் முதல்வராக வரும் ஆடுகளம் நரேன் அவமானப்படுத்திவிடுகிறார். இது ஒருபுறம் இருக்க மந்திரி பதவி கேட்டுச் செல்லும் ராவ் ரமேஷையே, புஷ்பராஜ் முதல்வராக மாற்றும் ஒரு கதை மறுபக்கம் ஓடிக் கொண்டுயிருக்கிறது. சிறு வயது முதல் தன்னுடைய சொந்த அண்ணனால் குலம் கோத்திரம் இல்லாதவன் என அவமானப்படுத்தப்பட்டு வரும் புஷ்பராஜ் அண்ணனின் மகளுக்காக எடுக்கும் ஒரு பெரிய ரிஸ்க் காரணமாக என்ன ஆகிறார் என இன்னொரு கதை ஓடுகிறது. இதுமட்டுமல்லாமல் புஷ்பா முதல் பாகத்தில் வனத்துறை அதிகாரியாக வரும் பன்வர்சிங் செகாவத் (பகத் பாசில்) புஷ்பராஜின் சந்தனக் கடத்தலை பிடித்தாரா? இல்லையா என புஷ்பா 2 படத்தின் (Pushpa 2 Movie Review) கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புஷ்பா 2 படத்தின் விமர்சனம் (Pushpa 2 Movie Review)
புஷ்பா 2 படத்தின் தொடக்கத்தில் வருகின்ற ஜப்பான் கட்சியானது எதுக்கு என புரியாத அளவுக்கு எந்த தொடர்பும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பன்வர்சிங் செகாவத் (பகத் பாசில்) செம்மரக் கடத்தல்காரராக மாறு வேடத்தில் வரும்போதுதான் திரையரங்கமே சூடுபிடிக்கிறது. படம் முழுவதும் முதல் பாகத்தை போலவே புஷ்பா 2 படத்திலும் செம்மரக் கடத்தல் தொழிலை போலிஸுக்கு தெரியாமல் புஷ்பராஜ் எப்படி அசால்ட்டாக செய்கிறார் போன்ற (Pushpa 2 Movie Review) காட்சிகள் ரசிக்க வைக்கிறது. புஷ்பராஜ் தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கோயிலில் சேலை கட்டி தீ மிதிக்கும் காட்சி, தனது அண்ணன் மகளின் மானம் காக்க சண்டை போடும் காட்சிகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் படத்தில் பன்வர்சிங் செகாவாத்துக்கு வைத்துள்ள முடிவு, கிளைமேக்ஸில் ரோப்பில் புஷ்பராஜ் செய்யும் சண்டை காட்சிகளில் உள்ள குளறுபடிகளால் படத்தை முழுவதுமாக கொண்டாட முடியவில்லை.
புஷ்பா 2 படம் ஒரே கதையில் பயணம் செய்யாமல் ஏகப்பட்ட கிளை கதைகளை படத்தில் ஏற்றியது தான் படத்திற்கு சிக்கலாக மாறிவிட்டது. மேலும் கிளைமேக்ஸ் காட்சி புஷ்பா 3-ம் பாகத்திற்கான லீடு எல்லாம் தேவையில்லாததாக (Pushpa 2 Movie Review) தெரிகிறது. படத்தில் ஜகபதி பாபு நடிக்கும் காட்சிகள் கதை ரீதியாக சொதப்பி விட்டது. இருப்பினும் பகத் பாசில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இவர்களின் நடிப்புக்காக புஷ்பா 2 படத்தை தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம்.