Pushpa 2 Teaser Update : அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தின் டீசர் ஏப்ரல் 8-இல் ரிலீஸ்
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் வரும் 8-ஆம் தேதி (Pushpa 2 Teaser Update) வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
புஷ்பா :
நடிகர் அல்லு அர்ஜுன் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் 2021 இல் புஷ்பா திரைப்படம் வெளியானது. சுகுமார் இயக்கிய இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாடல்களும் மிகுந்த கவனம் பெற்றன. இதில் ‘ஊ’ சொல்றியா மாமா பாடல் மாபெரும் வரவேற்பை பெற்று, ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி சர்வதேச அளவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஸ்டைல் மன்னராக நடித்த அல்லு அர்ஜுனின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது.
Pushpa 2 Teaser Update :
இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து ஆகஸ்ட் 15-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் டீசர் வரும் 8 ஆம் தேதி வெளியாக (Pushpa 2 Teaser Update) உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் அல்லு அர்ஜும் தனது X தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக மிரட்டல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் முந்தைய போஸ்டரின் இணைப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகம் வட மாநில ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அங்கு வசூலிலும் அதிகரிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முதல் பாகத்தைவிட பிரமாண்டமாக உருவாகி வரும் இரண்டாம் பாகமும் காட்சியமைப்பு மற்றும் பாடல்கள் மூலம் அதிக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!