சூரியனை விட 500 மடங்கு பிரகாசமான பொருள் Quasar கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Quasar :
இந்த பிரபஞ்சத்தில் மிகவும் பிரகாசமான பொருள் என்னவென்றால் பொதுவாக சூரியன் என்று தான் நாம் அனைவரும் கூறுவோம். அதற்கு காரணம் என்னவென்றால் அது உலகிற்கு வெளிச்சத்தை வழங்குகிறது. ஆனால் சமீபத்திய ஐரோப்பிய ஆய்வு இந்த பிரபஞ்சத்தில் மிகவும் பிரகாசமான பொருள் Quasar என்று கூறியுள்ளது. இது சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு பிரகாசமாக உள்ளது என்றும் மேலும் அது தினமும் சூரியனின் எடைக்கு நிகரான உணவை உண்ணுகிறது என்றும் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் தெற்கு கண்காணிப்பகம் பிரபஞ்சத்தில் மிகவும் பிரகாசமான பொருளான குவாசரின் குணாதிசயத்தை அறிவித்துள்ளது. விண்வெளியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களில் மிகவும் ஒளிரும் பொருள் என்றும் கூறியுள்ளது. இந்த குவாசரின் மையத்தில் இருக்கும் கருந்துளை ஒவ்வொரு நாளும் நமது சூரியனின் எடைக்கு நிகரான உணவை உண்ணுகிறது. இந்த குவாசர்கள் (Quasar) தொலைதூர விண்மீன் திரள்களின் சுறுசுறுப்பான மற்றும் பிரகாசமான மையங்களாகும். மேலும் இவை மிகப்பெரிய கருந்துளைகளால் இயக்கப்படுகின்றன.
மிகப்பெரிய கருந்துளைகள் அவற்றின் அபரிமிதமான வலுவான ஈர்ப்பு விசையால் உறிஞ்சப்படும் பொருளை உட்கொள்வதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. ஐரோப்பிய ஆய்வு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட குவாசரின் மையத்தில் உள்ள கருந்துளை இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் கருந்துளை ஆகும். இந்த குவாசரின் அதிகாரப்பூர்வ பெயர் “J0529-4351” மற்றும் இது நமது கிரகத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. அதன் ஒளி பூமியை அடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாகும் என்று ஐரோப்பாவின் தெற்கு கண்காணிப்பகம் கூறியுள்ளது. இந்த குவாசர் ஆய்வின் முதன்மை ஆசிரியர் கிறிஸ்டியன் வுல்ஃப் கூறுகையில் நாங்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் கருந்துளையை கண்டுபிடித்துள்ளோம். இது சுமார் 17 பில்லியன் சூரியன்களைக் கொண்டுள்ளது. மேலும் இது ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு சூரியனுக்கு மேல் சாப்பிடுகிறது. இது பிரபஞ்சத்தில் சூரியனை விட மிகவும் ஒளிரும் பொருளாகும் என்றார்.
மிகவும் பிரகாசமான குவாசருக்குள் இழுக்கப்படும் பொருள் அதிக ஆற்றலை வெளியிடுகிறது. அது சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு அதிகமாக ஒளிரும் தன்மையுடையது. மிகவும் பிரகாசமாகவும் ஆற்றல் மிக்கதாகவும் பிரமாண்டமாகவும் இருந்தபோதிலும் இந்த குவாசர் “வெற்றுப் பார்வையில் மறைந்திருந்தது” என்று ஆசிரியர் கிறிஸ்டியன் வுல்ஃப் தெரிவித்துள்ளார். ‘ஒரு மில்லியனுக்கு குறைவான ஈர்க்கக்கூடிய குவாசர்களைப் பற்றி நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தும் இன்று வரை இந்த குவாசர் பற்றி அறியப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது’ என்று குவாசர் ஆய்வின் இணை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஓன்கென் கூறினார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!