Gistak Media – Cinema News | Trending News | Latest News

Ra-Next Real Estate : ரியல் எஸ்டேட் டிஜிட்டல் கட்டமைப்பு தர முகமையாக ராநெக்ஸ்ட்.. அங்கீகாரம் வழங்கியது டிராய்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (Ra-Next Real Estate) டெக்னாலஜிஸ் ஆனது டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு நிறுவனமாக (DCRA) தேர்ந்து  எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. இது ரியல் எஸ்டேட் சொத்துக்களின் டிஜிட்டல் கட்டமைப்பை ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்கும். முகமையாக ‘நெக்ஸ்ட்’ (Next) நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது

'நெக்ஸ்ட்'-க்கு டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு நிறுவன அங்கீகாரம்

‘நெக்ஸ்ட்’ நிறுவனத்திற்கு டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு நிறுவன அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்டிடங்களின் தயார்நிலையின் தரப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளை செயல்படுத்த வழங்கப்பட்ட அங்கீகாரம் ஆகும்.

  • இது தடையற்ற இணைப்பு, ஃபைபர் உள்கட்டமைப்பு, வைஃபை செயல்திறன் மற்றும் எதிர்கால ஸ்மார்ட் தொழில்நுட்பங்களுக்கான கட்டிடங்களின் தயார்நிலை ஆகியவற்றின் (Ra-Next Real Estate) தரப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளை செயல்படுத்தும்.
  • இந்த மதிப்பீடுகள் கட்டிடங்களை வாங்குபவர்கள் மற்றும் கட்டிடங்களில் குடியிருப்பாளர்களுக்குத் தரமான டிஜிட்டல் இணைப்பை உறுதி செய்யும்.
  • மேலும் இந்த அங்கீகாரம் ஆனது கட்டிடங்களின் டிஜிட்டல் தயார்நிலையை மேம்படுத்த, டெவலப்பர்கள் தரமான உள்கட்டமைப்பை வடிவமைக்க, மற்றும் வாடிக்கையாளர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும்.
  • மேலும் ஒரு குறிப்பிட்ட கட்டிடம் வருங்காலத்தில் வரப்போகும் அதிநவீன ஸ்மார்ட்ஹோம் வசதிகளுக்கு தகுதியானதா என்பது குறித்தும் இந்த நிறுவனம் சான்றிதழ் வழங்கும்.
  • இனிமேல் மக்கள் ஒரு வீடு அல்லது அலுவலகத்தை வாங்கும்போது மற்றும் வாடகைக்கு எடுக்கும்போது, அங்கு தண்ணீர் வசதி, மின்சார வசதி இருக்கிறதா என பரிசோதிப்பது போல அந்தப் பகுதியில் இன்டர்நெட் வேகம் எப்படி இருக்கும்? மற்றும் செல்போன் சிக்னல் கிடைக்குமா? என்பவை பற்றியும் பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். இனிமேல் நிலப் பிரச்சனைகள் ஆனது சீக்கிரம் தீரும். குறிப்பாக சொத்து பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு (Ra-Next Real Estate) வரும். இது ரியல் எஸ்டேட் துறையின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top