Raayan Release Date : ராயன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் நடித்துள்ள ராயன் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை (Raayan Release Date) தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Raayan Release Date - ராயன் ரிலீஸ் தேதி அறிவிப்பு :
ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து, ராயன் படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை அவரே எழுதி உருவாக்கியுள்ளார். பவர் பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ராயன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் (Raayan Release Date) என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக தனுஷ் ஃபர்ஸ்ட் காபியை அடிப்படையாகக் கொண்டு ராயன் படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, எடிட்டிங் என அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால் தேர்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் அவரது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபரணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை வடசென்னையில் வசிக்கும் மூன்று சகோதரர்களைப் பற்றியது, இது ஒரு கேங்ஸ்டர் கதைக்களம் என்று கூறப்படுகிறது. முன்னதாக, படத்தின் முதல் பாடலான அடங்காத அசுரன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, ராயன் படத்தின் இரண்டாவது பாடலான வாட்டர் பாக்கெட் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – பாடகி ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். சந்தீப் கிஷன் – அபர்ணா பாலமுரளியின் காதல் பாடலாக வெளியான இந்தப் பாடல், தனுஷ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா ஆகியோர் குடும்பமாக இணையும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!